Advertisment

இளையராஜாவுக்காக சென்ற பாரதிராஜா, சீமான்; பிரசாத் ஸ்டூடியோ அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு

பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜா இசைக்கூடம் கடந்த 25 ஆம் தேதி இடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல கெடுபிடி அதிகரிக்கப்பட்டது. ஆனால்,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ilaiyaraja music recording theater demolished? prasad studio demolished? prsad recording studio, இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜ இசைக்கூடம் இடிப்பு, ilaiyaraja recording studio, Cinema industry plan to protest

Ilaiyaraja music recording theater demolished? prasad studio demolished? prsad recording studio, இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜ இசைக்கூடம் இடிப்பு, ilaiyaraja recording studio, Cinema industry plan to protest

இளையராஜா இசைக்கூடம் தொடர்பான பிரச்னையில், இளையராஜாவுக்கு ஆதரவாக சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்ற இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் இருவரையும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வகத்தினர் உள்ளே அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisment

தமிழ் சினிமாவை 40 ஆண்டுகளுக்கு மேல் தனது இசையால் ஆட்சி செய்து வருபவர் இசைஞானி இளையராஜா. தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் இந்தியை விரட்டிவிட்டது என்றாலும் தமிழகத்தில் அன்று பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இந்திப் பாடல்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. அப்போதுதான் 1976-இல் வெளியான அண்ணக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் மூலம், தமிழகத்தில் சினிமாப் பாடல்களாக எஞ்சியிருந்த இந்தியை முழுவதுமாக விரட்டி அடித்தார் இசைஞானி இளையராஜா. இது ஒரு கலைஞன் தெரிந்தோ தெரியமலோ தனது கலை மூலம் சமூக நிகழ்வுகளுக்கு ஆற்றும் பங்களிப்பு என்று ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் குறிப்பிடுகிறார்.

தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?

இளையராஜா சினிமா உலகில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இடையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தேனிசை தென்றல் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரணி, வித்யாசாகர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணண், அனிருத் என பல இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இன்றும் இளையராஜா சைகோ படத்தில் உன்ன நினச்சு நினச்சு என இளைஞர்களை முனுமுனுக்க வைக்கும் பாடல்களை அளித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி இளையராஜா 40 ஆண்டுகளுக்குமேலாக இசை ரசிகர்களுக்கு விருந்து அளித்த பாடல்கள் எல்லாமே பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜாவின் இசைக்கூடத்தில் இருந்துதான். இளையராஜாவின் காலத்தால் அழியாத பல பாடல்கள் உருவான பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜாவின் இசைக்கூடம் இடிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானதும் பலரும் இசை ரசிகர்களும் சினிமா உலகினரும் கொதித்துப்போனார்கள்.

இந்த 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் இளையராஜா காலை முதல் நள்ளிரவு வரை இசையமைத்த இடம் என்ன ஆனது என்று பலரும் தெரிந்துகொள்ள முயன்றனர்.

பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளரான எ.வி.பிரசாத்தி மகன் நிர்வாகத்தில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “ராஜா சார், இது எப்போதுமே உங்கள் இசைக்கோயில். நீங்கள் எங்கள் ஸ்டுடியோவில் இசை அமைப்பது எங்களுக்குதான் பெருமை. கடைசிவரை நீங்கள் இங்கேதான் இசையமைக்க வேண்டும்” என்று பேசினார்.

ஆனால், பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகம் காலத்தில் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் கைக்கு வந்தது. சாய் பிரசாத் இளையராஜாவின் இசைக்கூடத்துக்கு ஒரு பெரும் தொகையை வாடகைக் கேட்டதாக கூறப்படுகிறது...  ஆனால், வாடகை வேண்டாம் என்று வெளியேறுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தோடு பேசியும் சம்மதிக்காமல் நிர்வாகம் இளையராஜாவின் இசைக்கூடத்தில் தங்களுடைய பொருட்களை வைத்திருக்கிறார்கள்.

தான் இசையமைக்கும் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகளுக்கும் இளையராஜா இங்கேதான் ஒத்திகை பார்ப்பார். அண்மையில், கமல்ஹாசனின் 60 ஆண்டு கால கலைவாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற உங்கள் நான் நிகழ்ச்சி இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போல, பெங்களூருவில் இளையராஜாவைப் பாராட்டும் விதமாக நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கும்  அவர் பிரசாத் ஸ்டுடியோவில் ரிகர்சல் செய்ய முடியாமல் போனது. இந்த நிகழ்ச்சிகளுக்காக இளையராஜா பெங்களூருவில் ரிகர்சல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜா இசைக்கூடம் கடந்த 25 ஆம் தேதி இடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல கெடுபிடி அதிகரிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், இளையராஜாவின் நண்பரும் இயக்குனருமான பாரதிராஜா, மற்றும் இயக்குனர் அமீர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் ஆகியோர் தலையிட்டு பிரசாத் ஸ்டுடியோ  நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால், தமிழ் சினிமா உலகினர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், ரெக்கார்டிங் ஸ்டுடியோ இடிக்கப்பட்டுவிட்டது எனபது பொய்யான செய்தி. சிலர் இடிக்கப்பட்டுவிட்டதாக வதந்திகளை பரப்பிவருவதாக ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர்.

தமிழ் சினிமா உலகினர் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகினரும் உலகமுழுவதுமுள்ள இளையராஜா இசை ரசிகர்களும் இசைஞானிக்கும் மீண்டும் அந்த இசைக்கூடம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாக சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்ற இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் இருவரையும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வகத்தினர் உள்ளே அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரசாத் லேப் உரிமையாளர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் உள்ளே சென்றனர். அப்போது, நுழைவாயிலில் சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகே இவர்கள் 5 பேரும் உள்ளே சுமூக பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment