நடிகை த்ரிஷா மீது மீண்டும் வழக்கு!

நடிகை த்ரிஷா மீது வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கானது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை த்ரிஷா கடந்த 2010-11-ம் ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமானவரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார். ஆனால், த்ரிஷா காண்பித்த வருமான கணக்கை ஏற்காத வருமான வரித்துறை, அவர் கூடுதலாக ஈட்டிய ரூ.3.50 கோடி வருமானத்தை சுட்டிக்காட்டியது. தவறான கணக்கு காண்பித்து ஏமாற்றியதாக நடிகை த்ரிஷாவுக்கு ரூ.1.11 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

ஆனால், இதனை எதிர்த்து நடிகை த்ரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த விசாரணையில் த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து வருமானவரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுட்டது.

×Close
×Close