Advertisment

இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!

சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற வேறுபாடும் அவரிடம் இல்லை. இசை எல்லாருக்கும் சமம் என்பதை, இசையாலே சொன்னவர்.

author-image
shalini chandrasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ilaiyaraaja songs, happy birthday isaignai ilaiyaraaja

Ilaiyaraaja songs, happy birthday isaignai ilaiyaraaja

Isaignani Ilaiyaraaja: தமிழ் திரையிசையை இளையராஜாவுக்கு முன், இளையராஜாவுக்கு பின் எனப் பிரிக்கலாம். சாபாக்களில் அமர்ந்து காஃபி, பஜ்ஜி, போண்டாவுடன் கைகளால் தாளம் தட்டி தான் இசையை ரசிக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, மூட்டை தூக்கும்போதும், வயலில் வேலை செய்யும் போதும், சலவை செய்யும் போதும், கல்லுடைக்கும் போதும் அலுப்புத் தெரியாமல் இருக்க, இசையைக் கேட்டுக் கொண்டே அன்றாட வேலைகளைச் செய்யலாம் என்பதை மாற்றியவர் இளையராஜா தான்.

Advertisment

சென்னை பெருநகர மாநகராட்சி: கொரோனா ஹாட்ஸ்பாட்களுக்கான புதிய கட்டுப்பாடு

இசை என்பது மேட்டுக்குடி வர்க்கத்துக்கானது என்பதை மாற்றி, சாமானியனையும் ரசிக்கச் செய்தவர். தமிழர்களின் வாழ்வியலை தனது விரல்களால் இசை மீட்டியவர். மரபிசையை நவீன இசையோடு சேர்த்து பரிமாறியவர். இளையராஜாவின் இசையைப் பொறுத்தவரைக்கும் இந்த நடிகருக்கு இப்படி தான் போட வேண்டும் என்ற வரைமுறையை அவர் வகுத்துக் கொள்ளவில்லை. அதே போல், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும், இயக்குநருக்கு ஏற்றவாறும் கூட தனது இசை வாழ்க்கையில் சமரசம் செய்துக் கொள்ளாதவர்.

ரஜினி, கமல், மோகன், முரளி, விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன், பாண்டியராஜன் என அனைத்து நடிகர்களுக்கும், சமமான இசையை வழங்கினார். பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுந்தர்ராஜன், மணிரத்னம் என மூத்த இயக்குநர்களுக்கும் சரி, புதிய இயக்குநருக்கும் சரி பாராபட்சமில்லாத இசையைத்தான் போட்டார். சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற வேறுபாடும் அவரிடம் இல்லை. இசை எல்லாருக்கும் சமம் என்பதை, இசையாலே சொன்னவர்.

இளையராஜா பிறந்தநாள்: மனநலனை சரி செய்யும் தமிழ் சமூகத்தின் சைக்கியாட்ரிஸ்ட்!

சரி இளையராஜாவின் சிறந்த பாடல்கள் என்று வரிசைப்படுத்துவதெல்லாம், இந்த நூற்றாண்டில் முடியாத ஒன்று. காரணம் ஒன்றுக்கு ஒன்று சளைத்தல்ல. ஆகையால் யூ-ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட இளையராஜாவின் சில பாடல்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

மேகா - புத்தம் புது காலை. இப்போது வரை 57 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி. இந்தப் பாடல் 52 மில்லியன் பார்வையாளர்களை நெருங்குகிறது. 

சைக்கோ - உன்ன நெனச்சு பாடல் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

அமைதிப்படை - சொல்லிவிடு வெள்ளி நிலவே. இந்தப் பாடல் இப்போது வரை 29.6 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.  

மெளன ராகம் - சின்ன சின்ன வண்ணக்குயில். 29 மில்லியன்

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ilaiyaraaja Ilaiyaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment