Jackpot movie review : ”இந்த உலகில் இல்லாதவர்கள் என்பதே இருக்கக் கூடாது, அனைவருக்கும் அனைத்தும் இருக்க வேண்டும் இதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் ” இப்படியொரு சீரியஸான மெசேஜை காமெடியாக சொன்னால் அதுதான் ஜாக்பாட் படம்.
தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது ஆட்டத்தை துவக்கி இருக்கும் ஜோதிகா, ஹீரோக்களை போல பெண்களாலும் எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூப்பித்து விட்டார். காற்றின் மொழி, ராட்சசி, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் பார்த்த ஜோதிகாவும், ஜாக்பாட்டில் நடித்திருக்கும் ஜோதிகாவும் டோட்டலி டிஃப்ரெண்ட். என்னதான் ஓவர் ஆக்டிங் என்று அவரை ரசிகர்கள் கலாய்த்தாலும் ஜோதிகாவின் கடின உழைப்பு என்பது அனைத்து பெண் கேரகடர்களுக்கும் ஒரு ரோல் மாடல் தான்.
குலேபகவாலி 2:
ஜாக்பாட் என்ற டைட்டுலுக்கு பதிலாக குலேபகவாலி2 என்று இயக்குனர் கல்யாண் பெயர் வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்து இருக்கும். குலேபகவாலியில் பிரபுதேவாவை வைத்து புதையல் கதை சொன்ன கல்யாண், இம்முறை ஜோதிகாவை வைத்து ஜாக்பாட் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் தான் சற்று நிதானத்தை இழக்கிறார்கள்.
தனது அண்ணன் மகள் ஜோதிகாவுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுப்படுகிறார் ரேவதி. பணத்திற்காக இவர்கள் இருவரும் செய்யும் அட்டூழியங்கள் அளவே இல்லாதது. பைக் திருடுவது, போலீஸ் வேடம் போட்டு மாமுல் வசூலிப்பது, போலி அரசு அதிகாரி என்று இப்படி பல சேட்டைகளை செய்து வரும் ஜோதிகா- ரேவதி க்கு அள்ள அள்ள குறையாத அக்சய பாத்திரம் குறித்து தெரிய வருகிறது.
ஆனால் அந்த பாத்திரம் இருக்கும் இடம் மிகப் பெரிய தாதாவான (அப்படி அவரே சொல்லி கொள்கிறார்) ஆனந்த் ராஜ் வீட்டில் இருக்கிறது. அவரை ஏமாற்றி இருவரும் எப்படி அக்சய பாத்திரத்தை எடுக்கிறார்கள். இவர்களின் திருட்டு தொழிலுக்கு என்ன காரணம்? என்ற சஸ்பென்சை இரண்டாம் பாதியில் உடைக்கிறார் இயக்குனர்.
சிங்கப்பெண் ஜோதிகாவை புலம்ப விட்ட தமிழ் ராக்கர்ஸ். ஜாக்பாட் லீக்!
நகைச்சுவை படம் என்பதால் படத்தில் லாஜிக்கெல்லாம் யோசிக்க வேண்டாம். ஆங்காங்கே சிரிப்பு அலை, மீதி இடங்களில் கடுப்பலை என படத்தின் இரண்டாம் பாதியின் நீளம் ரசிகர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இருந்த போதும் ரவுடியாக இருக்கும் ஆனந்த் ராஜுக்காக படத்தை பொறுமையாக காத்திருந்து ரசித்து விட்டு செல்கிறார்கள் ரசிகர்கள். பெண் போலீசாக ஆனந்த் ராஜின் இரட்டை வேடம் ரசிகர்களை கீழே விழுந்து சிரிக்க வைக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த ஆந்திரா காமெடி அடித்தூள். படம் முழுக்க இப்படியே சிரிப்பலை வந்திருந்தால் படம் வேற லெவலில் இருந்து இருக்கும். ஆனால் இந்த கேள்வி மட்டும் தோன்றாமல் இல்லை. “எப்படி இருந்த மனஷன் நானும் ரவுடிக்கு பிறகு இப்படி ஆக்கிடீங்களே”
என்றுமே இளமையாக ரேவதி படத்தின் இன்னொரு பலம். ஆனால் டாப் ஹீரோக்கள் உடன் டூயட் பாடியவரை மொட்ட ராஜேந்திரன் உடன் எல்லாம் ஆட வைத்து அழகு பார்த்திருப்பது காமெடியாக இருந்தாலும் இது டூ மச் என்று தான் கேட்க வைக்கிறது. படத்தின் இசை ஓகே ரகம். கோலமாவு கோகிலா, A1 போன்ற படங்களில் நடித்த ரெடின் இந்த படத்திலும் அசத்தியுள்ளார்.
படத்திற்காக சண்டை பயிற்சி எல்லாம் எடுத்துக் கொண்டு அசத்தி இருக்கிறார் ஜோதிகா. ஜோ ஃபேன்ஸ் அவரை ஸ்கீரினில் பார்த்ததுமே கொண்டாடுகிறார்கள். ஆனாலும் படத்தை பார்த்த அனைவரின் மனதிலும் நிற்பது ஆனந்த் ராஜ் தான். எந்த கவலையும் இல்லாமல் 2 மணி நேரம் ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜாக்பாட்டிற்கு டிக்கெட் எடுக்கலாம்.