ஜெயலலிதா வாழ்க்கை பட வழக்கு: விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Jayalalithaa Biopic
Jayalalithaa Biopic

Jayalalithaa: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தலைவி படப்பிடிப்பை, ஊரடங்கு காரணமாக மூன்று மாதம் நிறுத்தி வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், தடை கோரிய வழக்கு விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ’தலைவி’ என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதற்கு முன்பு ரம்யா கிருஷ்ணன் நடித்த, “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் ’தலைவி’, ’ஜெயா’, ’குயின்’ ஆகிய படங்கள், மற்றும் இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு செய்திருந்தார்.

இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கொரோனா ஊரடங்கு, காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் மூன்று மாதமாக படப்பிடிப்பை நிறுத்தப்பட்டுள்ளதாக எனவே வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jayalalithaa biopic thalaivi queen kangana ranaut al vijay j deepa

Next Story
இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!Ilaiyaraaja songs, happy birthday isaignai ilaiyaraaja
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express