Advertisment

சுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி!

யாருக்கும் அடங்காத போலீசாக ஜெயம் ரவி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அடங்க அறு

அடங்க அறு

அடங்க மறு டீசர் :

Advertisment

நடிகர் ஜெயம் ரவியின் அடங்கமறு டீசர் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பேராண்மை, தனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் இல்லாமல், இப்படத்தில் சற்று வித்தியாசமான் போலீசாக யாருக்கும் அடங்காத போலீசாக ஜெயம் ரவி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டீசரை ஜெயம் ரவி ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த டீசரை பார்த்த பிரபலங்கள் பலரும் ஜெயம் ரவியை வெகுவாக பாராட்டி வருகின்றன. நாடே ஓடும் போது, நாம் நடுவில் ஓட வேண்டும், தனியாக ஓட வேண்டும் என்று நினைத்தால் காணாமல் போய்விடுவோம்… அடங்கமறு… அத்துமீறு… திமிரி எழு… திருப்பி அடி போன்ற வசனங்கள் டீசரில் கைதட்டல்களை அள்ளியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment