காலா படத்தில் பாடல் ஆல்பம் டீசர் வெளியீடு! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் உருவானது பற்றிய ஆல்பம் டீசர் இன்று வெளியானது.

2016ம் ஆண்டில் இயக்குனர் ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான ‘கபாலி’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து மீண்டும் கைகோர்த்துள்ள இந்த ஜோடியின் புதிய படம் ‘காலா’ விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை நடிகர் தனுஷ் நிறுவனமான ‘வண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.

காலா படத்தின் பாடல்கள் வரும் மே 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மே 1ம் தேதி முதல் பாடல் ‘செம்ம வெயிட்டு’ வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதன் அடுத்தகட்டமாக படத்தில் பாடல் ப்ரிவ்யூ வீடியோ வெளியாகியுள்ளது. காலா படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்.

காலா படத்தின் சிங்கிள் டிராக் செம்ம வெயிட்டு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இன்று வெளியாகியிருக்கும் பாடல் உருவாக்கம் வீடியோவிற்கும் பெரும் வரவேற்பை மக்கள் அளித்துள்ளனர்.

இன்று வெளியான இந்த டீசரில், படத்தில் இடம்பெற்றுள்ள 9 பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் இயக்குனர் ரஞ்சித் பேசியுள்ளனர். மேலும் இந்தப் பாடல்களின் ஷூட்டிங் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது. நடிகர் ரஜினிக்கு நடன இயக்குனர்கள் பிருந்தா மற்றும் சாண்டி நடன கற்றுத்தரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் மொத்தமாக 9 பாடல்கள் இடம்பெற உள்ளது. அவை:

1. போராடுவோம்
2. நிக்கல் நிக்கல்
3. தெருவிளக்கு
4. தங்க சேல
5. கற்றவை பற்றவை
6. செம வெயிட்டு
7. கண்ணம்மா
8. கண்ணம்மா – ACAPELLA
9. உரிமையை மீட்போம்

இந்த 9 பாடல்கள் உருவான விதம் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்து ரஞ்சித் மற்றும் சந்தோஷ் இன்று வெளியான வீடியோவில் பேசியுள்ளனர்.

இது குறித்து முதலில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பின்னர் தனுஷ் தன் நிறுவனமான ‘வண்டர்பார் பிலிம்ஸ்’ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

×Close
×Close