Advertisment

காலா, கபாலி நாயகிகளுக்கு குரல் கொடுத்தவர் இவர்தான்: பிரத்யேக பேட்டி  

பின்னணி குரலில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் அனைவரும் குரல்களுக்கான அனைத்து வாய்ப்புகளுக்கும் தன்னம்பிக்கையுடன் தயாராக இருக்க வேண்டும் என பின்னணி குரல் ஜி.ஜி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
காலா, கபாலி நாயகிகளுக்கு குரல் கொடுத்தவர் இவர்தான்: பிரத்யேக பேட்டி  

பின்னணி குரலில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பேர் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வரும் ஜி.ஜி கோவையில் பிரத்தேயக பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மற்றும் வாய்ஸ் ஸ்டெஜர் சார்பில் பின்னணி குரல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காலா, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த ஜிஜி கலந்து கொண்டு  மாணவர்கள் மற்றும் பின்னணி குரல் கொடுப்பதில் ஆர்வவர்களுக்கு பின்னணி குரல் எப்படி கொடுப்பது என்பது குறித்தும் அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும் பயிற்சி வழங்கினார்.

publive-image

பின்னர் பேசிய ஜி.ஜி ”சென்னை மெட்ரோ ஸ்டேஷனுக்கு குரல் கொடுத்தது எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்பெல்லாம் வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கடினமாகவே இருந்தது. ஆனால் தற்போது சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் வாய்ப்புகள் எளிதாகவே கிடைக்கிறது.வாய்ஸ் ஸ்டேஜர் என்ற பயிற்சி பட்டறை நடத்தி வருகிறேன். எதற்காக இந்த பயிற்சி பட்டறை நடத்துகிறேன் என்றால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பேர் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்னென்ன? கொரோனாவுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.சீரியல் மற்றும் படங்கள் வேலைகள் நின்றது.

இதனால் பலரும் பாதிக்கப்பட்டனர். மாற்று சிந்தனையாக  வீட்டில் இருந்தே வாய்ஸ் ரெக்கார்ட் செய்து அனுப்பினேன். சிக்கல் என்று இல்லாமல் அந்த சிக்கலுக்கு ஏத்த மாதிரி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

publive-image

இயக்குனர் பா.ரஞ்சித்துடன் பணியாற்றுவது குறித்து?

பா.ரஞ்சித்துடன் மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்றுவது மிகவும் சவாலானது. பொறுமையாக வேலை வாங்குவார். நான் பண்ணும் வேலை எதுவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த கதாபாத்திரம் பேசுகிறேனோ அதுக்கேத்த மாதிரி என்னுடைய வாய்ஸை மாற்றிக் கொள்வேன்.

யாருடைய குரலுக்கு பின்னணி குரல் கொடுக்கும் போது மிகவும் சிரமப்பட்டீர்கள்?

அழுகை சீனில் குரல் கொடுப்பது மிகவும் சிரமமாகவே இருக்கும்.இருந்தாலும் அதை நான் நுணுக்கமாக நேரம் எடுத்து பின்னணி குரல் கொடுப்பேன்.

தற்போது பின்னணி குரலுக்கு எந்த அளவுக்கு வாய்ப்புகள் வருகிறது? சினிமா விட சின்னத்திரை குறைவாகவே இருந்தது. அதன் பின் சீரியல் மட்டும் டப்பிங் சீரியல்கள் நிறைய வர ஆரம்பித்தது.

பின்னணி குரலில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் அனைவரும்  குரல்களுக்கான அனைத்து வாய்ப்புகளுக்கும் தன்னம்பிக்கையுடன் தயாராக இருக்க வேண்டும் என பின்னணி குரல் ஜி.ஜி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment