காலா திரைப்படம் தொடர்பான வழக்கு... ரஜினிகாந்த் பதில் தர நீதிமன்றம் உத்தரவு

காலா திரைப்படம் தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா ரஞ்சித், தயாரிப்பு நிறுவனம் ஒருவாரத்தில் பதில் தர வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலா படத்தை கரிகாலன் என்ற துணைத் தலைப்புடன் தயாரிக்கக் கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கரிகாலன் என்ற தலைப்பை தான் ஏற்கெனவே பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இதனை விசாரணை செய்த நீதிபதி இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், பா ரஞ்சித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக வழக்கு விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

×Close
×Close