'காலா'வில் ரஜினியுடன் நடிப்பது யார் யார்?

ரஜினியின் பேக் டூ பேக் படங்களை இயக்கியவர்களின் பட்டியலில் பா ரஞ்சித்துக்கு 2-வது இடம்

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கபாலி’ வெற்றியைத்தொடர்ந்து, மீண்டும் அவர்கள் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘காலா’. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது.

அதோடுமட்டுமல்லாமல், யாருமே எதிர்பார்க்காத நிலையில் காலா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் திடீரென லீக்கானது. ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் திடீரென வெளியானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில், ‘காலா’வில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. படத்தின் கதாநாயகியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். மேலும், சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல், சம்பத், ரவி காளே, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், ஆகாஷ், வத்திக்குச்சி திலீபன், மணிகண்டன், அருந்ததி, ஷாக்‌ஷி அகர்வால், பெருமாள், மற்றும் சுகன்யா போன்ற நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

காலா படத்தின் கதையானது திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தமிழர் எவ்வாறு தனது சோதனைகளை கடந்து செல்கிறார் என்பதை மையமாக கொண்ட கதை என கூறப்படுகிறது. காலா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்படுகிறது.

ரஜினியின் பேக் டூ பேக் படங்களை இயக்கியவர்களின் பட்டியலில், எஸ் பி முத்துராமனுக்கு அடுத்து தற்போது பா ரஞ்சித் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close