Advertisment

Kaithi Box Office Report : கைதியா இருந்தாலும் மிரட்டுறாப்ல.... 3 நாள் வசூல் நிலவரம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaithi box office report karthi's kaithi collection sr prabhu - Kaithi Box Office Report : கைதியா இருந்தாலும் மிரட்டுறான் யா.... 3 நாள் வசூல் நிலவரம்

kaithi box office report karthi's kaithi collection sr prabhu - Kaithi Box Office Report : கைதியா இருந்தாலும் மிரட்டுறான் யா.... 3 நாள் வசூல் நிலவரம்

Kaithi Box Office Report : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Advertisment

சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் 'அஞ்சாதே' நரேன், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் நாளன்று 300க்கும் குறைவான தியேட்டர்களிலேயே கைதி ரிலீசானது. ஆனால், தற்போது படம் குறித்த பாஸிட்டிவ் டாக் அதிகரித்துள்ள நிலையில், தியேட்டர்களின் எண்ணிக்கை சற்று அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

வசூலைப் பொறுத்தவரை, இந்த படம் சென்னை சிட்டியில் முதல் மூன்று நாட்களில் ரூ. 1.07 கோடி வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தில் முதல் 3 நாட்கள் வசூல் - 11 கோடி

ஆந்திரா, தெலங்கானா முதல் 3 நாட்கள் வசூல் - 4.45 கோடி

என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment