Advertisment

Kaithi Movie Review Release Updates : இது கார்த்தி தீபாவளி.. பிகிலுக்கு சரியான மிகப்பெரிய டஃப் கொடுத்த கைதி!

kaithi Review,kaithi FDFS Response kaithi Live Updates : மாநகரத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வெறித்தனம் கைதியில் தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaithi movie review release

kaithi movie review release

kaithi movie review updates :இந்தாண்டுக்கான தீபாவளி வெளியிடுகளாக பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. 'பிகில்' நடிகர் விஜய் நடிப்பில், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டுள்ள கதை. நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் வரும் 'கைதி' சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. வெவ்வேறு கதைக்களங்களுடன் வெளி வரும் இப்படங்களால் இவ்வருடத் தீபாவளி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என நம்பப்பட்டது

Advertisment

விஜய்யுடன் கார்த்தி போட்டியா என்ற சலசலப்புகள் ஏற்கனவே அதிகமாக பேசப்பட்டது. ட்விட்டரில் இதுக் குறித்த விவாதங்களும் அரங்கேறின. ஆயினும் கதையை நம்பி களத்தில் இறங்குவதாக தயாரிப்பாளர் தரப்பு மற்றும் இயக்குனர் கூறியிருந்தார்.

படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. வித்யாசமான படைப்புகளுக்கு தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் கைக்கொடுப்பார்கள் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள கைதி திரைப்படம் மற்றொரு சான்றாக விளங்கியுள்ளது.

Bigil Movie Review

காலை படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கைதி திரைப்படம் பிரமாதமாக இருப்பதாக கருத்து கூறியுள்ளனர். கைதி படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பாருங்கள்.

Live Blog

kaithi Movie Review Release Live Updates, kaithi FDFS Response,kaithi review actor karthi Lokesh Kanagaraj : கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் பருத்தி வீரனுக்கு அடுத்தப்படியான படைப்பு



























Highlights

    14:23 (IST)25 Oct 2019

    லாரி த்ரில்லர்!

    கைதி திரைப்படம் ஒரு இரவில் லாரியில் அரங்கேறும் த்ரில்லர் என்று படத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

    14:21 (IST)25 Oct 2019

    கைதி படத்தின் இடைவேளை

    கைதியின் இடைவெளி காட்சியை வர்ணித்து ரசிகர் போட்டிருக்கும் ட்வீட்

    12:45 (IST)25 Oct 2019

    கார்த்தி சினிமா கெரியரில் மற்றொரு மைல்கல்!

    கார்த்தி சினிமா கெரியரில் மற்றொரு மைல்கல் கைதி. இயக்குனர், படக்குழு என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.

    12:43 (IST)25 Oct 2019

    மலேசியா ரசிகர்களின் வாழ்த்து மழையில்!

    கைதி திரைப்படத்தை மலேசியாவில் பார்த்த தமிழ் ரசிகரின் பதிவு. படம் ஹாலிவுட் லெவலுக்கு இருந்ததாக பாராட்டு.

    12:26 (IST)25 Oct 2019

    கைதி முதல் பாதி!

    கைதி படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகரின் ட்வீட். நீண்ட நாளுக்கு பிறகு கார்த்தியை இந்த ரோலில் பார்த்தது மகிழ்ச்சி. முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதிக்காக வெட்டிங் என்று பதிவிட்டுள்ளார்.

    11:37 (IST)25 Oct 2019

    கைதி படக்குழுவிற்கு பாராட்டு!

    கைதி படத்தை பார்த்த ரசிகர்கள் மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

    11:14 (IST)25 Oct 2019

    கைதி வெற லெவல்!

    கைதி படத்தை பார்த்த சூர்யாவின் வெறித்தனமான ரசிகர் ட்வீட் .

    11:07 (IST)25 Oct 2019

    கைதிக்கு பாராட்டு!

    கைதி படத்தை படத்தை பாராட்டி தள்ளும் பிரபல யூடியூப் விமர்சகர் .

    kaithi Movie Review Release Live Updates :

    தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் கைதி.

    மாநகரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜனரஞ்சக சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவார்ந்தது.

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி இல்லை. நாயகன் மட்டுமே. இந்த திரைபடத்தின் இசை சாம் CS, ஒளிப்பதிவு சத்யன் சூரியன், படத்தொகுப்பு பிலோமின் ராஜ். கைதி திரைப்படத்தை டிரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

    படம் வெளியாவதற்கு முன்பே படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கி இருந்தது. பிகிலுடன் போட்டி போட களத்தில் இறங்கி இருக்கிறது என்றால் படத்தில் ஏதோ ஒன்று வெறித்தனமாக இருக்க போகிறது என்பதை ரசிகர்கள் நம்பினர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.

    கார்த்தியின் நடிப்பை படம் பார்த்த அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லை சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் கைதி நல்ல பெயரை வாங்கியுள்ளது.

    Diwali Karthi Tamil Movie Review
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment