Advertisment

”நான் எடுக்க விரும்பிய படங்களின் கீழ் ’கைதி’ இடம்பெறும்” - கார்த்தி

Karthi Speech: நான் இதில் ஹீரோ என்று சொல்ல மாட்டேன்,  ஆனால் முக்கிய கதாபாத்திரங்களில் நானும் ஒருவன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaithi box office collection

கைதி

Kaithi Trailer Launch: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ”கைதி” திரைப்படம், ”பிகில்” மற்றும் ”சங்க தமிழனுடன்” இணைந்து தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதன் ட்ரைலர் கடந்த திங்கட் கிழமை வெளியானது.

Advertisment

ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை நம்பியதற்காக நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தார். ”பெண்கள் கதாபாத்திரங்கள் இல்லாமல் ஒரு படத்தை தயாரிப்பதில் எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது, ஆனால் இந்த கனவை அடைய கார்த்தியின் நம்பிக்கை எனக்கு உதவியது” என்றார்.

அடோடு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் லோகேஷ் நன்றி தெரிவித்தார். “நான் பாடல்கள் மற்றும் கதாநாயகி இல்லாமல் கைதியை உருவாக்கியுள்ளேன். ஒரு கமர்ஷியல் படத்தில் இத்தகைய ஸ்டீரியோடைப்களை உடைப்பது கடினம். கார்த்தி மற்றும் பிரபு இல்லாவிட்டால், இந்த படம் உருவாகியிருக்காது” என்றார்.

லோகேஷுடன் இணைய மாநகரம் படம் தான் காரணம் என்றார் எஸ்.ஆர்.பிரபு. “அவர் உக்கமளிக்கும் விதமாக படம் இயக்குவதில் தீவிரமானவர். மேலும், கைதி உள்ளூரில் ஏற்படும் பதிப்பாக இருக்கும், மேலும் இதில் ஏராளமான அதிரடி காட்சிகள் உள்ளன” என்றார் பிரபு.

கைதி பலருக்கும் உத்வேகமாக இருக்கும் என்றார் கார்த்தி. “நாம் எப்போதும் கமல் ஹாசனைப் பற்றியும் அவர் தயாரிக்கும் படங்களைப் பற்றியும் பேசுகிறோம். கைதி அந்த வகைகளில் இடம்பெறும். இது ஒரு லட்சிய படம். நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, ஒரு சில படங்களை இயக்க விரும்பினேன். கைதி அந்த வகையின் கீழ் வருகிறது” என்றார்.

மேலும், மெட்ராஸ் படத்தைப் பற்றிக் குறிப்பிட்ட கார்த்தி, "நான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தாலும், ரஞ்சித் விவாதித்த அரசியலை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பல வருடங்கள் கழித்து, இது ஒரு முக்கியமான உதாரணம் என்பதை நான் உணர்ந்தேன். மெட்ராஸ் படத்தில் நடித்ததிலிருந்து, அதே போன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

ஜோலார்பேட்டை குடிநீர் ரயிலுக்கு டாட்டா... மழை அளவு அதிகரித்ததால் சேவை நிறுத்தம்..

லாரி ஓட்ட வேண்டும் என்ற தனது விருப்பம் கைதியில் நிறைவேறியதாகக் குறிப்பிட்ட கார்த்தி, “நான் இதில் ஹீரோ என்று சொல்ல மாட்டேன்,  ஆனால் முக்கிய கதாபாத்திரங்களில் நானும் ஒருவன்” என்றுக் குறிப்பிட்டார்.

அதிரடி திரில்லர் படமான கைதி படத்தில், ரமணா, அஞ்சதே-புகழ் நரேன் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திருநெல்வேலி, சென்னை மற்றும் அதைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Karthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment