நடிகை காஜல் அகர்வால்-கவுதம் கிச்லு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுமை திருமணம் செய்தார்.
கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். கர்ப்ப காலத்தில் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
முதல்வரை சந்தித்த பிரபல இயக்குநர்
தென்மேற்கு பருவக் காற்று, கண்ணே கலைமானே, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.
இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு உங்களின் ஒருவர் நூலை முதல்வர் பரிசாக அளித்தார்.
முதல்வருக்கு உலகை உலுக்கிய பத்து நாட்கள் நூலினை இயக்குநர் சீனு ராமசாமி வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
இவர் கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக முதல்வர் @mkstalin ஆற்றிய போர்க்கால நடவடிக்கைளுக்கு
— Nikil Murukan (@onlynikil) April 19, 2022
நன்றி கூறி
ஜான் ரீடு எழுதிய 'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' நூலினை தந்து
தனது மாமனிதன்,இடிமுழக்கம் படங்களுக்கு வாழ்த்தும்
உங்களில் ஒருவன் நூலை பரிசாக பெற்றார் @seenuramasamy உடன்@Udhaystalin #NM pic.twitter.com/VyT2mC2BP6
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளியாகும் பிரபல நடிகையின் படம்
தமிழில் நேரம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, நய்யாண்டி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் நஸ்ரியா.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மனைவியான இவர், திருமணத்துக்கு பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது தெலுங்கு நடிகர் நானி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டீஸர் யூ-டியூபில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ரஜினியுடன் அடுத்த படம் உறுதி: இயக்குனர் நெல்சன் திடீர் அப்டேட்
இணையத்தில் கசிந்த தனுஷ் பட காட்சிகள்
யாரடி நீ மோகினி பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் என இரு கதாநாயகிகள். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால், படக் குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil