Advertisment

வித விதமான ஃபோட்டோக்களால் இணையத்தை கலக்கும் காஜல் அகர்வால்!

Kajal Agarwal: காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு பாலிவுட் படமான ’கியூன்! ஹோ கயா நா’ படத்தில் அறிமுகமானார். அவரது முதல் தெலுங்கு படம் 2007-ல் வெளியான, ’லட்சுமி கல்யாணம்’.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kajal Agarwal Photoshoot

காஜல் அகர்வால்

Kajal Agarwal: நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்த ‘கோமாளி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் அதிரடியாக ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் காஜல். அதோடு அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கே பார்ப்போம்.

Advertisment

Kajal Agarwal Photoshoot தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடிகை வலம் வரும் காஜல் அகர்வாலின் படங்கள் தான் தற்போது இணையத்தை ஆட்டிப் படைக்கிறது.

Kajal Agarwal Photoshoot சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் காஜல் இந்த ஃபோட்டோஷூட்டின் மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மேலும் தீனி போட்டிருக்கிறார். இந்தப் படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ் மழையை பெற்று வருகின்றன.

Kajal Agarwal Photoshoot அவரது சமீபத்திய படங்களில் ராயல் ப்ளூ நிற உடையில் வித விதமான போஸ் கொடுத்திருக்கிறார் காஜல்.

Kajal Agarwal Photoshoot மற்றொரு பட தொகுப்பில், காஜல், பேஸ்டல் கிரீன் கலர் க்ராப் டாப்பும், அதற்கு ஜோடியாக பலாஸோவும் அணிந்திருக்கிறார்.

Kajal Agarwal Photoshoot இந்தப் படத்தில் ஃப்யூஷன் லுக்கில் இருக்கிறார் காஜல். ப்ளஞ்சிங் நெக் லைனுடன் கூடிய கறுப்பு நிற க்ராப் டாப்பும், கறுப்பு காக்ராவும் அணிந்திருக்கும் அவர் அதற்கு பொருத்தமாக துப்பட்டாவை, சேலையின் முந்தானையைப் போல் போட்டிருக்கிறார்.

Kajal Agarwal Photoshoot காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு பாலிவுட் படமான ’கியூன்! ஹோ கயா நா’ படத்தில் அறிமுகமானார். அவரது முதல் தெலுங்கு படம் 2007-ல் வெளியான, ’லட்சுமி கல்யாணம்’. 2011-ல் சிங்கம் படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டுக்கு வந்த அவர் அதிலும் வெற்றி பெற்றார், காஜலின் மற்றொரு படமான ’ஸ்பெஷல் 26’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tamil Cinema Kajal Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment