Advertisment

மாலத்தீவில் ஜாலி ஹனிமூன்: 1 ரூபாய் கூட செலவு செய்யாத காஜல்!

தி முராக்காவில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் ஐம்பதாயிரம் டாலர்கள். 

author-image
WebDesk
New Update
Kajal Aggarwal Honeymoon in Maldives

Kajal Aggarwal Honeymoon in Maldives

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் தனது கெளதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் முடிந்து புதிய வீட்டிற்கு சென்ற இந்த ஜோடி, ஒரு வாரம் கழித்து தேனிலவுக்காக மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு தங்களது மறக்க முடியாத தருணங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

Advertisment

Kajal Aggarwal Honeymoon in Maldives கடலுக்கடியில் உள்ள ஹோட்டல் அறை.

காஜலும்  கெளதமும், இந்தியப் பெருங்கடலின் கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு கீழே உள்ள, உலகின் முதல் நீருக்கடியில் அமைந்துள்ள ஹோட்டலான தி முராகாவில் தங்கினர். நீருக்கடியில் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் அறையின் புகைப்படங்களை காஜல் பகிர்ந்து கொண்டார்.

தி முராக்காவில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் ஐம்பதாயிரம் டாலர்கள்.  இது இந்திய ரூபாயில் சுமார் முப்பத்தெட்டு லட்சம். ஒரு பத்து நாள் தங்குவதற்கு உணவு மற்றும் பிற பார்வையிடல் செலவுகள் உட்பட ஐந்து கோடி செலவாகும் என்று பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Kajal Aggarwal Honeymoon in Maldives காஜல் அகர்வால் ஹனிமூன்

ஆனால் சமீபத்திய அறிக்கைகள் முந்தைய மதிப்பீட்டிற்கு முரணாக உள்ளன.  இப்போது காஜல் தனது தேனிலவுக்கு ஒரு ரூபாய் கூட செலவிட்டிருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மாலத்தீவு அரசாங்கம் தங்கள் நாட்டை மற்ற நாடுகளுக்கான சுற்றுலா தலமாக ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளதாகவும், குறிப்பாக இந்திய சுற்றுலா பயணிகளை கவர ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, பிரபலங்களுக்கான சலுகை என்னவென்றால், இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கொண்டவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஐந்து நட்சத்திர உணவுகளை இலவசமாகப் பெறுவார்கள். 5 மில்லியனுக்கும் மேலான பின்தொடர்பாளர்கள் இருந்தால் அவர்கள் தங்கும் அறை, உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட்டுகளை இலவசமாகப் பெறுவார்கள்.

Kajal Aggarwal Honeymoon in Maldives ஹாயாக ரெஸ்ட்

காஜல் அகர்வால் இன்ஸ்டாவில் 16 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பதால், முராகா ஹோட்டல் அவரது தேனிலவுக்கு இலவச அறை, உணவு மற்றும் பயணச் செலவுகளை வழங்கியதுடன், அவருக்கான உடைகளை மட்டுமே அங்கு கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டதாம். மாலத்தீவில் அவர் குதூகலித்த இடங்களையும், அறை படங்களையும் சமூக வலைதளங்களில் இடுகையிடுமாறு ஓட்டல் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனராம். இவ்வாறு மும்பை ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், இதை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தவில்லை.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kajal Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment