Kalidas Tamil Movie In Tamil Rockers: பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் படத்தை முதல் நாளிலேயே திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் நல்ல ரிவ்வியூ கிடைத்த படம் காளிதாஸ். அந்தப் படத்தையே முதல் படமாக வெளியிட்டு படக் குழுவினரை தமிழ் ராக்கர்ஸ் அதிர வைத்திருக்கிறது.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், புதுப்படங்களை திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. 2019-ம் ஆண்டு இறுதி கட்டத்தில் டிசம்பர் 13 (நேற்று) வெள்ளிக் கிழமை அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகின. இவற்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரியை விட, அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் படத்திற்கு பல்வேறு தரப்பிலும் நல்ல ரிவ்வியூ கிடைத்தது.
பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் பரத், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பாக்ஸ் ஆபீஸிலும் இந்தப் படம் நல்ல வசூலைக் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தச் சூழலில் இந்தப் படத்தை ரிலீஸ் தினத்தன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக வெளியிட்டு படக் குழுவினரை அதிர வைத்திருக்கிறது. இதனால் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸின் இந்த அட்டகாசத்தை அடக்க திரைத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், அது பலன் கொடுக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு இது போல புதுப் படங்களை ஆன்லைனில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. திரைத்துறையினரின் குமுறலுக்கு இப்போதைக்கு விடிவு கிடைப்பதாக இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.