கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு ஆந்திர மாநில அரசு விருது

கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு ‘என்.டி.ஆர். தேசிய விருது’ அறிவித்துள்ளது ஆந்திர மாநில அரசு.

கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு ‘என்.டி.ஆர். தேசிய விருது’ அறிவித்துள்ளது ஆந்திர மாநில அரசு.

ஒவ்வொரு வருடமும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து ‘நந்தி விருது’ வழங்கி வருகிறது ஆந்திர அரசு. அத்துடன், ‘என்.டி.ஆர். தேசிய விருது’, ‘பின்.என்.ரெட்டி மாநில விருது’, ‘நாகிரெட்டி & சப்ரணி மாநில விருது’, ‘ரகுபதி வெங்கையா மாநில விருது’ மற்றும் ‘நடுவர் சிறப்பு விருது’ ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது.

2014, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘என்.டி.ஆர். தேசிய விருது’ 2014ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான ‘பி.என்.ரெட்டி’ மாநில விருது, ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close