விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜனவரி 15) நடைபெற்றது. கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் வந்தார். பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம் குறித்து கமல்ஹாசன் அறிவித்தார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனமும் சோனி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பதை உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்தார். கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் தான் நடிக்க உள்ளதை சிவகார்த்திகேயன் பெருமையாகக் கூறினார்.
கமல்ஹாசனின் தயாரிப்பில், சிவகார்த்திகேயனை இயக்குனர் ராஜ்குமார் இயக்குகிறார். சிவகார்த்திகேயனும் அவரும் நண்பர்கள் என தெரிவித்தனர். உலக நாயகன் கமல்ஹாசன் பெயரை திரையரங்குகளில் போஸ்டகர்களில் பார்த்து கைத்தட்டி ரசித்த நான், இப்போது அவருடைய தயாரிப்பில் நடிக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"