இந்திய ராணுவத்திற்கு கமல் ஹாசன் அளித்த பயிற்சி… வைரலான வீடியோ
Vishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். Vishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ: விஸ்வரூபம் 2 படத்தில் நடிகர் கமல் ஹாசன் கதாநாயகனாக…
Vishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Vishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ:
விஸ்வரூபம் 2 படத்தில் நடிகர் கமல் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் முதல் பாகத்தில் நடித்த ஆன்ட்ரியா, பூஜா குமார், நாசர், ராகுல் போஸ், சக்கீர் கபூர் உட்பட பலரும் நடித்துள்ளனர். விஸ்வரூபம் முதல் பாகத்தில் ரகசிய உளவாளியாக நடித்த கமல், இந்த பாகத்தில் இந்திய ராணுவ அதிகாரி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இவர் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள ஃப்லேஷ்பாக் பாகத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி படப்பிடிப்பின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விஸ்வரூபத்தின் முதல் பாகம் கடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.