Advertisment

விக்ரம் படத்தைத் தயாரிக்கிறார் கமல்ஹாசன்

விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தை, தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் கமல்ஹாசன்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
vikram

விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தை, தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் கமல்ஹாசன்.

Advertisment

‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்தப் படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.

எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம்.

‘ஸ்கெட்ச்’ படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவரும், கமல்ஹாசனின் அசோஸியேட் இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment