இந்தியன் 2 கதை இது தானா? சமூக வலைதளங்களில் வெளியானதால் ‘ஷாக்’கில் படக்குழு!

Kamal Haasan: ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் கதைகளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் லீக்காகி இருக்கிறது.

Indian 2 movie story leaked
இந்தியன் 2

Indian 2: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘இந்தியன்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த கமல் ஹாசனே இதிலும் ஹீரோவாக நடிக்க, முதல் பாகத்தில் கிருஷ்ணசாமி கதாபாத்திரத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதோடு, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தவிர, ஐஸ்வர்யா ராஜேஷும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் தேதிகள் இல்லாத காரணத்தால், பின்பு அதிலிருந்து அவர் விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் கதைகளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் லீக்காகி இருக்கிறது. இதில் யூ ட்யூபராக சித்தார்த்தும் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தும் நடிக்கிறார்களாம். இந்தியன் தாத்தா வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்தியாவில் நடக்கும் சில தேவையற்ற சம்பவங்கள் குறித்து சித்தார்த் யூடியூப் மூலம் தெரிவிக்கிறாராம். இதைத் தொடர்ந்து, இந்தியன் தாத்தா இந்தியாவுக்குத் திரும்பி வந்து சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொள்ள, பத்திரிக்கையாளராக பிரியா பவானி சங்கர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் காஜலின் வேடம் குறித்து எதுவும் கூறப்படவில்லை. ஆனால் அவர் இந்தியன் 2 படத்திற்காக சில தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கும் விஷயம் ஏற்கனவே வெளியானது. எனவே அவருக்கு மிக முக்கிய பாத்திரம் ஒன்று இருக்கும் என நம்பப் படுகிறது!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kamal haasan shankar indian 2 story leaked in social media

Next Story
பிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி!Bigg Boss Tamil 3 day 63, 25.08.19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com