Advertisment

ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா! பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடலை இன்று வெயிடுகிறார் கமல்!!!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சிசன் 2வில் கடந்த ஞாயிற்றுகிழமை, விஸ்வரூபம் 2 படத்தின் பாடலை வெளியிட இருப்பதாக அறித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg-Boss-2-Tamil

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சிசன் 2வில், விஸ்வரூபம் 2 படத்தின் பாடலை இன்று அவர் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Advertisment

கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சியை தொகுதி வழங்கிய போது, கட்டைசியாக, ‘‘வித்தியாசமான முயற்சியாக இந்த நிகழ்ச்சியில் விஸ்வரூபம்2 படத்தின் பாடலை வெளியிடலாம் என இருக்கிறேன்’’ என்று அறிவித்தார்.

இதனால் அவருடைய ரசிகர்கள் விஸ்வரூபம் பாடலை காண, ஆர்வமாக நேற்று விஜய் டிவி முன்பு அமர்ந்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுடன் பேசினார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் போலியாக இருப்பதாக குற்றச்சாட்டை வைத்து ஒவ்வொருவரிடமும் பதிலை கேட்டார்.

இறுதியாக நிகழ்ச்சி முடியும் நிலையில் கமல், விஸ்வரூபம் பாடலை நாளை வெளியிடுவதாக அவர் நேற்று அறிவித்தார். இன்றைய பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் வெளியாக போகும் பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருக்கின்றனர்.

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment