Advertisment

இந்திக்கு ஒரு சக் தே இந்தியா; தமிழுக்கு கனா

ஹீரோ கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகி இருக்கும் மற்ற நான்கு படங்களுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற நடிகையின் மீதும், இயக்குனர் அருண் மீதும் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'கனா' திரைப்படத்திற்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு.

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanaa Movie Review in Tamil

Sivakarthikeyan, Aishwarya Rajesh starrer Kanaa movie Review - சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா விமர்சனம்

Kanaa Movie Review : டிசம்பர் 20, 21 மிக முக்கியமமான நாளாக சினிமா வட்டாரங்களில் பார்க்கப்பட்டது. காரணம், பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரது படமும் ஒரு நாளில் ரிலீஸ் ஆனது. தனுஷின் 'மாரி -2', விஜய் சேதுபதியின் 'சீதக்காதி', ஜெயம் ரவியின் 'அடங்க மறு', வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்து புதுமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'கனா' என அனைத்து படங்களும் திரைக்கு வந்து தமிழ் திரைப்பட ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

Advertisment

இந்த ஐந்து முனை போட்டியில் வெற்றி பெற்றது யார்? அது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட மற்ற நான்கு படங்களுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற நடிகையின் மீதும், இயக்குனர் அருண் மீதும் நம்பிக்கை வைத்தும் எடுக்கப்பட்டிருக்கும் 'கனா' திரைப்படத்திற்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு.

விவசாயம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்ற இரண்டு கனமான கயிறுகளில் இயக்குனர் நடந்து சென்று இருக்கிறார். அந்த கயிறுகளில் ஒன்றில் மீது கால் வைக்கும் பொழுது சிறிது தடுமாறினாலும் சிக்கல் தான். அவ்வாறு இல்லாமல், படம் முடியும் வரை அந்த கயிறுகளின் மேல் வெற்றிகரமாக  பயணம் செய்திருக்கும் இயக்குனர் அருண்ராஜா காமராஜிற்கு சபாஷ்!

'குளித்தலை' என்ற ஒரு கிராமத்தில் பிறந்து, கிரிக்கெட் விளையாட துடிக்கும் 'கௌசியாக' நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். கிரிக்கெட் என்ற ஒரே குறிக்கோளுடன் மற்ற அனைத்தையும் மறந்து; தடைகளை தாண்டி இந்திய அணிக்காக விளையாடி உலக கோப்பை வென்று சாதித்து காட்டும் கதாபாத்திரமாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு அத்தனை எதார்த்தமாக அமைத்துள்ளது. வட சென்னை பத்மாவை பற்றி பேசி முடிப்பதற்குள், கௌசியை பற்றி பேச வைத்துவிட்டார் ஐஸ்வர்யா. இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த காக்கா முட்டையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தவர் இதில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? தன் நடிப்பின் மூலம் நம்ப வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

"பொண்ணா பொறந்துட்டு உனக்கு எதுக்கு கிரிக்கெட் எல்லாம்? அதுலாம் பயலுக விளையாடுற விளையாட்டு," என்று சொல்லும் ஒவ்வொரு நபரிடமும் கௌசி சொல்லும் பதில் "இந்தியா தோத்துப்போனப்போ எங்க அப்பா அழுதாரு, நா கிரிக்கெட் விளையாடி ஜெய்ச்சி எங்கப்பாவ சந்தோஷ படுத்தனும்."

சரி, இவ்வளவு தூரம் தன்னுடைய பெண்ணை உற்சாகப்படுத்தும் அந்த அப்பா யாரு? என்று முதல் சீனில் போலீசாக வரும் முனிஷ் காந்த் கேட்பது போல் நாமும் கேட்டல், விவசாயி முருகேசனாக அறிமுகம் ஆகிறார் நடிப்பின் அரக்கன் சத்யராஜ்! ஆம், இனி இவரை அப்படி தான் அழைக்க வேண்டும்.

இந்த நடிகனை தமிழ் சினிமா இன்னும் மேல்மேலும் உபயோக படுத்த வேண்டும். படத்தின் மிகப்பெரிய சக்தி இவர்தான். பயிர் கருகி விவசாயம் இனிமேல் செய்ய முடியாது என்று அரசு அதிகாரிகள் இவரிடம் விளக்கும் காட்சியில்; ஒரு விவசாயி எலி மருந்து குடித்து துடித்து சாகும் பொழுது இவரது கண்களில் பயத்தை காட்டும் காட்சியில்; விவசாய டிராக்டரை வித்து கடனை அடைத்து டாக்ஸி டிரைவராக மாறி அந்த கார் சாவியை வாங்கும் காட்சியில் - மிரட்டி இருக்கிறார் மனுஷன்! ஒன்பது ருபாய் நோட்டிற்கு பின் சத்யராஜ் நடித்துள்ள மற்றொரு சிறந்த படம் இது.

'Chak De India' படத்தில் 'Coach Kabir Khan' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஷாருக் கான் அசத்தி இருப்பார். தடுமாறும் பெண்கள் இந்திய ஹாக்கி அணியை வைத்து உலக கோப்பையை வென்று காட்டுவார்! இங்கு அதே பணியை சிவகார்த்திகேயன் செய்துள்ளார். 'நெல்சன் திலீப் குமார்' என்று இண்டெர்வலுக்கு பின் அறிமுகம் ஆகிறார் சிவா. ஷாருக் கான் செய்த பாணியை பின்பற்றி இருக்கிறார் சிவா. தான் இப்பொழுது ஒரு 'Commerical' ஹீரோவாக இருந்தாலும்; அதை எல்லாம் இந்த படத்தின் மீது திணிக்காமல், அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை செய்து இருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தெரியுமா? 26 வயதில் கிரிக்கெட்டில் இருந்து இதய நோய் காரணமாக ஓய்வு பெற்றவர். அனைவரும் தங்களது வாழ்க்கையை தொடங்கும் வயதில் அவர் ஓய்வு பெற்றார். அதே போல் தான் சிவா கதாபாத்திரமும். தனது முதல் மேட்சில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வு அறிவித்து பல வருடம் கழித்து மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்து பெண்கள் அணியை சாம்பியன் ஆக்குகிறார்! தல தோனியின் mannerism-களை அங்கங்கே தூவி விடுகிறார் சிவா.

எடிட்டிங் மற்றும் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இந்த படத்தை தாங்கி பிடித்துள்ளது. மேட்ச் நடக்கும் காட்சிகளாக இருந்தலும் சரி, விவசாய பூமியை காட்டும் விதமாக இருந்தாலும் சரி, மிகவும் நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார். இவரை தவிர்த்து, இயக்குனர் அருண்ராஜாவின் வசனங்கள் தீப்பொறி.

"ஆச பட்டா மட்டும் போதாது; அடம் பிடிக்க தெரியணும்,  "சமச்சவங்கள கூட டக்குனு பாராட்டிடறோம், ஆனா அத வெதச்சவங்களுக்கு ஒன்னு நா ஏன் கவனிக்க மாட்டேங்கிறோம்," போன்ற வசனங்கள் கை தட்டல்களை அள்ளுகிறது. சத்யராஜ், ஐஸ்வர்யாவை தவிர்த்து; அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமா; மண்டி வைத்திருக்கும் கடைக்காரராக நடித்துக்கும் இளவரசு போன்றோரும் அருமையாக நடித்து இருக்கின்றனர்.

இப்படி இவ்வளவு positiveகளை கொண்டுள்ள கனா படத்தில் சில காட்சிகள் நம்மை சோதிக்கின்றன.விவசாயம் பற்றி கௌசி உலக கோப்பை semi-final presentation தருவாயில் அதுவும் சுற்றி அனைவரும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, தமிழில் சொற்பொழிவு நடத்துவது எல்லாம் கொஞ்சம் ஒவர் பாஸ்! அதே போல் BCCI அதிகாரிகள் மெக்கானிக் கடைக்கு வந்து சிவகார்த்திகேயனை அழைத்து சென்று நீ தான் இந்திய மகளிர் அணிக்கு 'Coach' என்று டைரக்ட்டாக உக்கார வைப்பதெல்லாம் கொஞ்சம் audience மத்தியில் 'உச்' கொட்ட வைக்கிறது. இந்த ஓட்டைகளை கொஞ்சம் சரி செய்திருக்கலாம். ஆனாலும்  இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய படங்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டது நிஜம்.

Aishwarya Rajesh Tamil Movie Review Sathyaraj Siva Karthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment