Advertisment

Raghava Lawrence: காஞ்சனா 3 வெற்றி, ராகவா லாரன்ஸின் அடுத்த மூவ் தெரியுமா?

kanchana 3 full movie in tamilrockers: காஞ்சனா 3 ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் முழுப் படத்தையும் வெளியிட்டுவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanchana 3 Full Movie, Kanchana 3 Latest Box Office, tamilrockers, காஞ்சனா 3

Kanchana 3 Full Movie, Kanchana 3 Latest Box Office, tamilrockers, காஞ்சனா 3

Kanchana 3 movie Latest Box Office Report and Raghava Lawrence's Next Movie: காஞ்சனா 3 படத்தின் வெற்றி, ராகவா லாரன்ஸை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதை மையமாக வைத்து அடுத்தடுத்த ‘மூவ்’களையும் தீர்மானித்துவிட்டார் அவர்.

Advertisment

தமிழ் சினிமாவில், ஒரு படத்தின் வெற்றியைப் போல அதன் அடுத்த பாகம் பிரமாண்டமாக இருப்பதில்லை. சிங்கம் 3 பாகங்கள் வந்தாலும், முதல் பாகம்தான் மாஸ். அதேபோல சாமி 2, சண்டக்கோழி 2 ஆகியன முதல் பாகத்தின் வெற்றியைத் தொடவில்லை.

Kanchana 3 Full Movie, Kanchana 3 Latest Box Office, tamilrockers, காஞ்சனா 3 kanchana 3 full movie in tamilrockers: தமிழ் ராக்கர்ஸை மீறிய காஞ்சனா 3 வெற்றி

Kanchana Full Movie With comedy scenes Succeeds TamilRockers:  காஞ்சனா 3 வசூலில் 115 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது.

ரஜினிகாந்திடம், ‘பாட்ஷா 2’ எடுப்பது குறித்து சிலர் பேசியபோது அவர் சொன்னது, ‘பாட்ஷா, ஒரு பாட்ஷாதான்’ என்றார். ஆனால் இந்த ஃபார்முலாவை உடைத்து முனி பட வரிசையில் 4-வது படமாக காஞ்சனா 3 படத்தை பெரும் வெற்றிப் படமாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 19-ம் தேதி வெளியான காஞ்சனா 3 வசூலில் 115 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. ஜாலியான காமெடி கலந்த பேய்க் கதையாக தனது முனி வரிசைப் படங்களை உருவாக்கி வரும் ராகவா லாரன்ஸ், இதிலும் அதே ஃபார்முலாவை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார். இதனால் காஞ்சனா 3 படத்தைக் காண குடும்பம் குடும்பமாக தியேட்டர்களை முற்றுகையிடுகிறார்கள்.

இத்தனைக்கும் காஞ்சனா 3 ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் முழுப் படத்தையும் வெளியிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டியே இந்த வெற்றி.

சரியாக கோடை விடுமுறையை மையமாகக் கொண்டு, முனி வரிசை படங்களை ராகவா லாரன்ஸ் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. காஞ்சனா 3 படம் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா 4 படத்திற்கு ராகவா லாரன்ஸை இப்போதே சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துவிட்டது.

காஞ்சனா 3 படத்தின் இந்திப் பதிப்பு வேலைகளில் இறங்கியிருக்கும் ராகவா லாரன்ஸ், அதை முடித்துவிட்டு காஞ்சனா 4 படத்திற்கு தயாராக இருக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் காஞ்சனா 4 வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

அஜீத், விஜய் படங்கள் கூட திருவிழாக் காலங்களில் வெளியாகியே கல்லாக் கட்டுகின்றன. ராகவா லாரன்ஸ் தனக்கான பாணியை உருவாக்கிக் கொண்டு, கோடை விடுமுறையை குறி வைத்து கலக்குகிறார்.

 

Raghava Lawrence Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment