Advertisment

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர!

ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது.

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர!

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்”..  இந்த வரிக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை  காலத்தால் அழிக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் தான்.

Advertisment

சினிமாவும்  கண்ணதாசனையும் பிரித்து பார்த்தால் இரண்டுமே முழுமையடையாது.   பாடல் இனிப்பது இசையாலா? கவியாலா? என்று கேட்டால் உங்களால் விடை சொல்லி விட முடியுமா?

பதினான்கு பிள்ளைகள், இரண்டு மனைவிகள் கவிஞர்  வாழ்வில்  அவர் நினைத்த அனைத்தும் அவருக்கு அமைந்தது.  ஒரு கவிஞர்  அப்போதைய சினிமாவை கட்டிப்போட்டு வைத்திருந்த இரண்டு துருவங்களான எம்.ஜி.ஆர், சிவாஜியை விட அதிகம் சம்பாதித்தார் என்று உங்களால் நம்ப முடிகிறதா?

publive-image

கண்ணதாசன்  அதிக இரக்க குணம் உடையவர். நேர்மையாக வாழ்ந்தால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்  என்பதை வாழ்ந்தும் நிரூபித்தார். இதை அவரின் மகள்  பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்  கூறியிருந்தார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற  4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதிய  கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாள் இன்று.  அவரின் மறைவின்  எழுத்து உலகம் சந்தித்த மாபெரும் இழப்பு.  அவர் மறைந்தாலும் அவரின்  பாடல்கள் இன்று வரை   நமது வீடுகளிலும், ரேடியோ சேனல்களிலும் சொல்லப்போனால் வாழ்க்கையிலும் ஒலித்துக் கொண்டுத்தான் இருக்கின்றன.

கவிதை மட்டும் எழுதவில்லை. கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார். பல்லாயிரக்கணக்கான கவிஞர்கள் சேர்ந்தால் என்ன செய்வார்களோ அதை ஒற்றை நாளாக நின்று செய்து காட்டி, ஜெயித்தவர். தன்னம்பிக்கை, காதல்தோல்வி, விடாமுயற்சி, தந்தை மகள் பாசம், சோதனை, வேதனை, வறுமை, காதல், காமம், தெய்வ பக்தி, புரட்சி, துரோகம், கேலி, என் இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

publive-image

காலத்தால் என்றும் அழியாதப் பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்த ’கவியரசர்’ கண்ணதாசனின் 38 ஆவது நினைவு நாள் . ஒருவர் இறந்த பின்பு அவரை குறித்த சுயசரிதை வெளியாகும். ஆனால் தான் வாழ்ந்த காலத்திலியே தன்னைப்பற்றி சுயசரிதை எழுதி என்னைப் போல் எந்த மனிதனும் வாழ்ந்திட கூடாது என்று உரக்க சொல்லினார் அந்த மாபெரும் கவிஞர். கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில்தான் நிலைகொண்டதில் மாற்றுக்கருத்து இல்லை.

பத்திரிகையாளர், அரசியல்வாதி, திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பல அவதாரங்களை எடுத்தவர். ஆனால் அவருக்கு மிகவும் பிடித்த அவதாரம் கவிஞர் தான். தனது 35 வயதில் வீடு வரை உறவு வீதி வரை மனைவி' போன்ற தத்துவப் பாடலை எழுதி உணர்ச்சிவசப்பட வைத்தார்.

'ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது. அதனால் எனது சரிதம் மற்றவர்களுக்குப் பாடமாக அமையட்டும்' என முன்னுரையிலேயே அவர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.

இதோ அவரின் நினைவு நாளில் காலத்தால் அழிக்க முடியாத, வெறு கவிஞர்களால் படைக்க முடியாத சில அற்புதமான பாடல்களில் சிறப்பு தொகுப்பு.

  1. சூரியகாந்தி திரைப்படம்

2. சுமைதாங்கி திரைப்படம்

3. அவள் ஒரு தொடர் கதை திரைப்படம்

4.காசேதான் கடவுள்ளப்பா

5. நிஜல் நிஜமாகிறது

Tamil Cinema Madras Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment