Advertisment

வீடியோ : கண்ணே கலைமானே படத்தின் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடிய பெண்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanne kalaimane, கண்ணே கலைமானே

kanne kalaimane, கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே படத்தின் பாடலுக்கு பெண்கள் தியேட்டரில் பெண்கள் சாமியாடிய வீடியோவை இயக்குனர் சீனுராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கண்ணே கலைமானே. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, பூ ராம், வடிவுக்கரசி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கண்ணே கலைமானே படத்தின் பாடலுக்கு பெண்கள் சாமியாட்டம்

இப்படத்தின் “அழைக்கட்டுமா தாயே” என்ற பக்தி பாடல் ஒன்று படத்தின் தொடக்கத்திலேயே வரும். இந்த பாடலை எழுதி தாமே பாடியுள்ளார் மதிச்சியம் பாலா.

இந்த பாடல் திரையில் ஓடத் தொடங்கிய சில நொடிகளிலேயே அங்கிருந்த பெண்கள் சிலர் சாமியாடித் தொடங்கிவிட்டனர். இதனை சீனு ராமசாமி ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.

February 2019

அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “#கண்ணேகலைமானே படத்தில் பெண்கள் சாமியாட்டம். பதிவு செய்து அனுப்பி தம்பி மனோஜ்க்கு நன்றி” எனக் கூறியிருக்கிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment