கார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்!

பாபி சிம்ஹா கதாப்பாத்திரத்தை என்னிடம் சொல்லி இருந்தால் நானே நடித்திருப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியது

வித்யாசமான படைப்புகளின் சொந்த காரரும், சூப்பர் ஸ்டாரின் அடுத்த கெட்டப்பை தீர்மானித்திருக்கும்  இளம் இயக்குநருமான  கார்த்திக் சுப்புராஜின் பிறந்த நாள் கொண்டாட்டம், ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்துள்ளது.

தமிழ் சினிமாவை அடுத்த தரத்திற்கு எடுத்துச் சென்று, எல்லோரையும் கவனிக்க வைத்தவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.  துணை இயக்குநராக பணிப்புரிந்தால் தான் இயக்குநர் ஆக முடியம் என்ற கோட்பாட்டை தகர்த்தெறிந்து விட்டு தனது முதல் படத்திலியே மிகப் பெரிய பெயரை வாங்கினார்.

இவரின், பீட்சா திரைப்படம் இன்று வரை  ’தி பெஸ்ட் த்ரில்லர் மூவி’ என்ற பெயரை பெற்றது. அடுத்து வெளியான ’ஜிகர்தாண்டா’ சொல்லவே வேண்டாம். சூப்பர் ஸ்டாரையே பொறாமை பட வைத்தது.  பாபி சிம்ஹா கதாப்பாத்திரத்தை என்னிடம் சொல்லி இருந்தால் நானே நடித்திருப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியது, அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்தது.

விஜய்சேதுபதியுடன் இறைவி, இவர் தயாரித்த மேயாத மான் திரைப்படம் என இவரின் ஒவ்வொரு படைப்புகளும் ஒவ்வொரும் விதம். இவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், இவர்களை எல்லாரையும் கண்டுக்காமல், கார்த்திக் சுப்புராக் நேரடியாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்குவதாக அறிவித்து மற்றொரு ஆச்சரியத்தையும் தந்தார்.

குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது, 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.  ட்விட்டர் வலைப்பக்கத்தில்  என்ற ஹாஷ்டேக் இன்றைய தினத்தில் ட்ரெண்ட் அடித்துள்ளது.

×Close
×Close