Advertisment

’தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டிஜிட்டலில் ரிலீஸாகாது’: கார்த்திக் சுப்பராஜ் உறுதி

இந்த கட்டத்தில், OTT தளத்திற்கு படத்தைக் கொடுப்பது பற்றி தயாரிப்பாளருக்கு ஐடியா எதுவும் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karthik subbaraj, Jagame Thandhiram OTT Release

karthik subbaraj, Jagame Thandhiram OTT Release

திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சினிமா வணிகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். தியேட்டர்கள் முன்பு போலவே பார்வையாளர்களை ஈர்க்கும் எனவும் அவர் நம்புகிறார். 37 வயதான இவர், "தியேட்டர்கள் திறந்தவுடன் திரண்டு வரும் கூட்டத்தில் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்கிறார்.

Advertisment

ஊரடங்கை ரத்து செய்யக் கோரி வழக்கு… ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி!

தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று கார்த்திக் கூறுகிறார். அதே நேரத்தில், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கருதுகிறார். எதிர்காலத்தில் OTT மற்றும் சினிமா அரங்குகள் அமைதியாக இணைந்து வாழும் என்றும் அவர் நினைக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் விவேக் ஹர்ஷன் ஆகியோர் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை காத்திருப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். “இந்த கட்டத்தில், OTT தளத்திற்கு படத்தைக் கொடுப்பது பற்றி தயாரிப்பாளருக்கு ஐடியா எதுவும் இல்லை. ஒரு கட்டத்தில் விஷயங்கள் இயல்பு நிலைக்கு வர வேண்டும். இது இப்படியே செல்ல முடியாது. அதன் பிறகு, படத்தை வெளியிடுவோம்” என்றார் பேட்டா இயக்குநர்.

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள ஜகமே தந்திராம் இந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றால், பட வெளியீட்டு திட்டங்கள் தடம் புரண்டது. ”இரத்தக்களரி வைரஸ் இல்லையென்றால்.. இன்று ஜாகமே தந்திரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியாக இருந்திருக்கும்” என கார்த்திக் மே 1-ம் தேதி ட்வீட் செய்தார்.

’க்யூட்’ ரகுல் ப்ரீத், ‘அழகு’ ஆத்மிகா – புகைப்படத் தொகுப்பு

தமிழ்நாட்டில் COVID-19 நிலைமை எப்போதையும் போலவே மோசமாக இருந்தாலும், ஜகமே தந்திரம் படத்திற்காக திரையரங்கு அழைத்துச் செல்வது குறித்து கார்த்திக் சுப்பராஜ் பாஸிட்டிவாக உள்ளார். எவ்வாறாயினும், கார்த்திக்கின் சமீபத்திய தயாரிப்பான ’பென்குயின்’ இந்த வெள்ளிக்கிழமை அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இதனை இயக்கியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

 

Dhanush Karthik Subbaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment