Advertisment

குட்டி விரல்கள், விலைமதிப்பற்ற ஆன்மா... கர்ப்பமானதை வித்தியாசமாக அறிவித்த சீரியல் நடிகை

இந்த பதிவு எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது மற்றும் உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
குட்டி விரல்கள், விலைமதிப்பற்ற ஆன்மா... கர்ப்பமானதை வித்தியாசமாக அறிவித்த சீரியல் நடிகை

சன் டி.வி சீரியல் நடிகை ஒருவர் தனது பிறந்த நாளில் வெளியிட்டுள்ள முக்கிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சன் டி.வி.யின் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். நடிகர் சஞ்சீவ், சைத்ரா ரெட்டி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. மேலும் குறுகிய வாரங்களிலேயே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குடும்பத்தை பாதுக்காக ஒரு பெண் படும் துயரங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் கயலின் தங்கை தேவி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அபிநயா. மோசமான மாமியாரிடம் மாட்டிக்கொண்ட மருமகள் தேவி கேரக்டரில் அபிநயா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அவரின் வாழ்க்கையை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகி கயலுக்கு ரசிகர்கள் சரியாக க்ரிடீட் கொடுத்து வருகின்றனர். இதனிடையே தேவி கேரக்டரில் நடித்து வரும் நடிகை அபிநாயா தற்போது தனது பிறந்த நாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் வெளியிட்டுள்ளார்.  

அபிநயாவின் கணவர் தீபக் விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவியை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட்டில்  நீண்ட காத்திருப்பு முடிந்துவிட்டது  "பத்து சிறிய விரல்கள், பத்து குட்டி விரல்கள். அன்பு மற்றும் கருணையுடன், எங்கள் குடும்பம் வளர்கிறது. இந்த விலைமதிப்பற்ற ஆன்மா, மிகவும் இனிமையானது மற்றும் புதியது. இந்த சிறிய வாழ்க்கை, ஒரு கனவு நனவாகும்." உங்கள் அனைவரின் அன்பும் ஆசீர்வாதமும் வேண்டும் ..



இந்த பதிவு எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது மற்றும் உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment