Advertisment

‘விஜய் 62’ படத்துக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ‘விஜய் 62’ படத்துக்காக, தன்னுடைய கால்ஷீட்டை மொத்தமாகக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
keerthy suresh

keerthy suresh

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ‘விஜய் 62’ படத்துக்காக, தன்னுடைய கால்ஷீட்டை மொத்தமாகக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Advertisment

‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் ‘விஜய் 62’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய க்ரீஷ் கங்காதரன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். தேசிய விருதுபெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்றுகிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.

‘விஜய் 62’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பரதன் இயக்கிய ‘பைரவா’ படத்தில், முதன்முதலில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸானது. விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

‘பைரவா’ ரிலீஸான ஒரு வருடத்திற்குள்ளேயே மறுபடியும் விஜய்யுடன் ஜோடி போட வாய்ப்பு கிடைத்திருப்பதால், ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் கேட்ட தேதிகளை, மொத்தமாகக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதனால் சில பட வாய்ப்புகளையும் அவர் மறுத்துள்ளாராம். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

 

Tamil Cinema Keerthy Suresh Ar Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment