Advertisment

’இவன் தான் என் குவாரண்டைன் பார்ட்னர்’: அதிர்ச்சி கிளப்பிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக் கொள்ள தயாராகி விட்டதாக ஆன்லைனில் சில தகவல்கள் வெளிவந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress keerthy suresh, quarantine partner

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். சமீபத்தில் ’ரங் தே’ படத்தின் போஸ்டரில் ரசிகர்களின் மனதை வென்றார். நிதின் ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

குளிர்பானத்தில் ஷேவிங் லோஷன்: புதுக்கோட்டையில் 2 மீனவர்கள் மரணம்

கீர்த்தி ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக் கொள்ள தயாராகி விட்டதாக ஆன்லைனில் சில தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும், இது ஒரு வதந்தி எனத் தெரிகிறது. இப்போது, அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது “தனிமைப்படுத்தப்பட்ட பார்ட்னரை” தெரியப்படுத்தியுள்ளார்.

அந்தப் பார்ட்னர் யாரென தெரிந்துக் கொள்ள நீங்கள் துடிப்பது தெரிகிறது. கீர்த்தியின் செல்ல நாய் நைக் தான் அது. சூரிய அஸ்தமனத்தை என்ஜாய் செய்யும் இருவரின் படத்தைப் பகிர்ந்த நடிகை, “எனது குவாரண்டைன் துணை!” எனக் குறிப்பிட்டிருந்தார். பல பிரபலங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும், லாக் டவுன் விதிகளை சிறப்பாக பின்பற்றி வருகின்றனர். தேவையில்லாமல் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல், நெருங்கியவர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

தூய்மை பணியாளர்களின் கால்களை சுத்தம் செய்த ஊராட்சி மன்ற தலைவி – அரியலூரில் நெகிழ்ச்சி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment