Advertisment

மீண்டுமொரு பெரிய படத்தில் ஒப்பந்தமான கீர்த்தி சுரேஷ்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
keerthy suresh

keerthy suresh

கடந்த 2018 நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது.

Advertisment

ஆம்! நடிகையர் திலகம், சாமி 2, சண்டக்கோழி, சர்கார் என பெரிய படங்களில் நடித்திருந்தார்.

இதில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த, நடிகையர் திலகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு, கீர்த்தியின் நடிப்பும் பலரால் வியந்து பாராட்டப்பட்டது.

இந்நிலையில் மீண்டுமொரு பெரிய படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம் கீர்த்தி. இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை இயக்கும் செய்தி ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் நீண்ட பெண் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சமீபத்தில் தன்னுடைய 20-வது படத்தை துவங்கியிருக்கிறார். ஒரு தெலுங்கு மற்றும் 2 இந்தி படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதனால் இவ்வருடம் பாலிவுட்டில் இவர் அறிமுகமாவது உறுதியாகியிருப்பது குறிப்பிடத் தக்கது.

 

Keerthy Suresh Maniratnam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment