Advertisment

கிளிக்கி: தாய் மொழி தினத்தில் புதிய மொழியை உலகிற்கு அறிமுகப்படுத்திய மதன் கார்க்கி!

கிளிக்கி எண்களைக் கற்றுக்கொள்ள 2 நிமிஷம் போதும், கிளிக்கி எழுத்துகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஒரு மணிநேரம் போதும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madhan Karky

Madhan Karky

Kiliki Language : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதில் காளகேயர்கள் என்ற போரிடும் குழுவை வலிமை மிக்க பாகுபலி அழிப்பது போன்று காட்டியிருந்தார் இயக்குனர். அந்த காளகேயர்கள் குழு ‘கிளிக்கி’ மொழியைப் பேசுவதாக படத்தில் காட்டியிருப்பார்கள்.

Advertisment

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் : மாநில அரசின் தலையில் விழுகிறதா கூடுதல் சுமை?

பாகுபலி படத்திற்காக அந்த மொழியை உருவாக்கியிருந்தார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. தற்போது மற்றவர்களும் அதனைக் கற்றுக் கொள்ளும் விதத்தில் முழு இலக்கண விதிகளோடு விரிவுப்படுத்தியிருக்கிறார்.

ஹாலிவுட்டில் இந்த மாதிரிப் படங்கள் அல்லது சீரிஸ்க்கென்றே தனியாக மொழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, பாகுபலியில் தான் முதன்முதலாக அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தற்போது அந்த முயற்சி அடுத்தக்கட்டத்தை அடைந்திருக்கிறது.

இது குறித்து, முன்னணி இதழுக்கு பேட்டியளித்த மதன் கார்க்கி, “பாகுபலி படம் பண்றப்போ அந்தப் படத்துக்குத் தேவையான அளவுல 700 வார்த்தைகள், 40 இலக்கண விதிகள் மட்டும் உருவாக்கினேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் இந்த மொழிய கத்துத்தர முடியுமானு கேட்டாங்க. அதற்கப்புறம் தான் இந்த மொழியை மேற்கொண்டு உருவாக்கலாமேனு யோசனை வந்துச்சு. நிறைய மொழிகள் கத்துக்கிறதுக்குக் கடினமா இருக்கும். அப்படி கடினமான விஷயங்கள் நிறைய இருக்கும் போது, கத்துக்கிறத பாதியிலேயே கைவிடுறவங்களும் நிறைய பேர் இருப்பாங்க. அதுனால நாமே இருக்கிறதுலையே சுலபமான மொழிய உருவாக்கக் கூடாதுனு யோசனை பண்ணேன். அதுனால மற்ற மொழியில நாம எதை எல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேமோ அது எதுவும் இல்லாம கிளிக்கிய வடிவமைச்சேன்.

பா.ரஞ்சித் படத்திற்காக இரவு பகல் பாராமல் ஜிம்மில் உழைத்த ஆர்யா – வீடியோ

கிளிக்கி எண்களைக் கற்றுக்கொள்ள 2 நிமிஷம் போதும், கிளிக்கி எழுத்துகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஒரு மணிநேரம் போதும். இதில் இருக்கின்ற இலக்கணங்களும் மிகவும் எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளும்படிதான் இருக்கும்” என்றார். அதோடு இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, ‘கிளிக்கி’ வெப்சைட்டை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி திறந்து வைத்திருக்கிறார்.

Lyricist Madhan Karky
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment