காதல்… கல்யாணம்… கர்ப்பம்..! கோலிவுட்டை உலுக்கிய டாப் வதந்திகள்

Tamil Cinema: முரட்டு சிங்கிளாக இருக்கும் சிம்புவின் திருமணத்தை எதிர்நோக்கி, ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

By: Updated: June 9, 2020, 12:38:00 PM

Kollywood : சினிமா உலகைப் பொறுத்தவரை நிஜ செய்திகளை விட, வதந்திகள் தான் ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெறும். பொய்செய்தி என்றாலும் கூட அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள மனது அலைபாயும். அந்த வகையில், இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் கோலிவுட்டில் தீயாய் பரவிய சில வதந்திகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

சியான் 60: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம்!

1. மேனேஜரை வேலையை விட்டு நீக்கிய விஜய்? 

பல வருடங்களாக நடிகர் விஜய்யின் மேனேஜராக இருந்து வருபவர் ஜெகதீஷ். தற்போது அவர் நடித்து முடித்திருக்கும், ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். ’மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவின் போது, மேடையில் ஜெகதீஷை புகழ்ந்துப் பேசினார் விஜய். இந்நிலையில், அவருக்கு தெரியாமல் ஜெகதீஷ் செய்த ஒரு வேலையினால், அவர் கோபமடைந்ததாகவும், உச்சகட்டமாக அவரை வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும் வதந்திகள் பரவின.

2. ஹீரோவாகும் ஜேசன் சங்சய்? 

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார். சினிமா குடும்பத்து வாரிசான அவர், அது தொடர்பான படிப்பை அங்கு படித்து வருகிறார். இந்நிலையில், ‘உப்பேனா’ என்கிற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. அந்த படத்தின் கதை பிடித்துப் போகவே அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதற்கான உரிமையை அவர் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. மாஸ்டர் படபிடிப்பின் போது இது சம்பந்தமாக, விஜய்யிடம் விஜய் சேதுபதி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் மகன் சஞ்சய் தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எனவும் வதந்திகள் பரவின.

அது மட்டுமா? விஜய் சேதுபதியின், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் கோகுல் இயக்குவதாகவும், அதில் சஞ்சய் சம்பளமே வாங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் பரவின. லாக்டவுனை சுவாரஸ்யப்படுத்த இப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.

3. சிம்புவுக்கு டும் டும் டும்…

முரட்டு சிங்கிளாக இருக்கும் சிம்புவின் திருமணத்தை எதிர்நோக்கி, ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே சிம்புவுக்கும், லண்டனில் வசிக்கும் அவரின் தூரத்து உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதைப் பார்த்த சிம்புவின் அப்பா டி. ராஜேந்தர், அம்மா உஷா, எங்கள் மூத்த மகனுக்கு ஏற்ற பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம், திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தனர்.

4. பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா? 

நயன்தாரா தனது முன்னாள் காதலரான பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் அது, வெறும் வதந்தி தான் என, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்த பிறகு தெரிந்தது. விஷால், கார்த்தி ஆகியோரை வைத்து பிரபுதேவா இயக்கிய ’கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிடப்பட்டது. அந்த படத்தை மீண்டும் பிரபுதேவா வேறு நடிகர்களை வைத்து இயக்குவதாகவும், அதில் நயன்தாரா தான் ஹீரோயின் என்றும் அந்த வதந்தி பரவியது.

5. சாயிஷா கர்ப்பமா? 

நடனத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள சாயிஷா, அவ்வப்போது நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், முன்பு எப்போதையும் விட, மெதுவான அசைவுகளால் ஆடியிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், சாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என கிளப்பி விட்டனர். பின்னர் இதனை சாயிஷாவின் தாய் மறுத்தார்.

Tamil News Today Live : இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,66,598 ஆக அதிகரிப்பு

6. கீர்த்தி சுரேஷ் திருமணம்? 

தொழிலபதிர் ஒருவரை கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளையாகப் பார்த்திருப்பதாகவும், அதற்கு இவரும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. பின்னர் இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. “இந்தச் செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இது எப்படிப் பரவத் தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை” என்று தெரிவித்திருந்தார் கீர்த்தி.

இப்படி பல வதந்திகள் இந்த லாக்டவுனில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kollywood rumors tamil cinema news thalapthy vijay simbu nayanthara keerthy suresh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X