உஜ்ஜெயினி கோவிலுக்கு நடிகை குஷ்பூ சென்றுள்ளார். அங்கு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருக்கும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். மேலும், நந்தி காதிலும் வேண்டுதல் விடுத்துள்ளார்.
Advertisment
தொடர்ந்து கழுத்தில் மாலையுடன் புகைப்படம் எடுத்துள்ளார். நடிகை குஷ்பூ சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பவர். இந்த நிலையில் அவரது புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
நடிகை குஷ்பூ தற்போதும் சினிமாவில் நடித்து வருகிறார். கூடவே பாஜக கட்சியிலும் முக்கிய நிர்வாகியாக உள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். குஷ்பூவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறிவருகின்றனர். மேலும் லைக்ஸ், ஷேர்களை தெறிக்க விட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“