Advertisment

கழுத்துல தாலி... நெற்றியில் குங்குமம்... சின்ன தல மனைவியாக நயன்தாரா... புகைப்படம் ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara in viswasam, நயன்தாரா

Nayanthara in viswasam, நயன்தாரா

viswasam : விஸ்வாசம் படத்தில் இளைய அஜித்தின் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா அப்படத்தில் தனது கெட்டப் போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

2007 ம் ஆண்டு நடிகர் அஜித் டபுள் ஆக்‌ஷன் கதாப்பாத்திரத்தில் நடித்த படம் பில்லா. அதன் பிறகு, மீண்டும் இரட்டை வேடத்தில் அவர் நடித்து வரும் படம் தான் விஸ்வாசம். இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் வரும் இரண்டு அஜித்களில் அப்பா அஜித்துக்கு ஜோடியாக காலா ஈஸ்வரி மற்றும் இளைய அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

விஸ்வாசம் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா

இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் வீடியோ இதுவரை வெளியான எல்லா மோஷன் போஸ்டர்களின் சாதனைகளையும் முறியடித்தது.

November 2018

குறிப்பாக அந்த போஸ்டரில் கெடா மீசையில், கெத்தாக வரும் பெரிய தல கெட்ட அப்பை பார்த்து சிலிர்த்து போன ரசிகர்கள், இன்னும் அந்த ஃபீல்லை விட்டே வெளியே வரவில்லை. இந்நிலையில், சின்ன தலயின் ஜோடியாக நடிக்கும் நயன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவில், சின்ன தல மனைவியாக தோற்றம் அளிக்கிறார் நயன். மாடர்ன் டிரெஸ்ஸில் ஒரு வித அழகு என்றால், கிராமத்து உடையில் தோன்றும் நயன் வேற லெவல் அழகு. இப்புகைப்படத்தை அவர் வெளியிட்ட வெறும் 1 நிமிடத்திலேயே 500 பேர் லைக் செய்துள்ளனர்.

Tamil Cinema Thala Ajith Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment