Advertisment

ஆர்ஆர்ஆர் பட ரீலிஸ் தேதி, அஜீத் படத்தில் மோகன்லால்? லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, எதற்கும் துணிந்தவன் போஸ்டர் வெளியீடு, 2 மில்லியன் பார்வைகளை தாண்டிய மகான்; முக்கிய சினிமா செய்திகள் இங்கே

author-image
WebDesk
New Update
ஆர்ஆர்ஆர் பட ரீலிஸ் தேதி, அஜீத் படத்தில் மோகன்லால்? லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Advertisment

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தயாராகி உள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை அலியா பட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. அந்த சமயத்தில் தான் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியிருந்தது. இதனால், படத்தை பின்னர் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், படக்குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 25ஆம் தேதி ஆர்ஆர்ஆர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

டிரைலரும், பாடல்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகருக்கு பிறந்த நாள்-திரை பிரபலங்கள் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப்புக்கு இன்று பிறந்த நாள். இவருக்கு திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இவரது மனைவி ஆயிஷா ஷெராஃப், கணவரின் கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘மிகவும் நல்ல மனிதரும், சிறந்த மகன் மற்றும் சிறந்த தந்தையுமான அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன், மகன் டைகர் ஷெராஃப், மகள் கிரிஷ்ணா ஆகியோரின் பெயர்களையும் இன்ஸ்டாகிராமில் ஆயிஷா டேக் செய்துள்ளார்.

ஜாக்கி ஷெராப் நடிகர் மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் சுற்றுச்சூழல் ஆர்வலராக திகழ்ந்து வருகிறார்.

இவர் தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஒரே நாளில் 2 மில்லியனை தாண்டி பார்க்கப்பட்ட விக்ரம் பட டிரைலர்

நடிகர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோரின் நடிப்பில் தயாராகி உள்ள மகான் படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் ஒரே நாளில் 2 மில்லியனை தாண்டி, அதாவது 20 லட்சத்துக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

பீட்சா, இறைவி, ஜகமே தந்திரம், பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படம் மகான்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரமும், துருவ் விக்ரமும் புதிய தோற்றத்தில் மிரட்டுகின்றனர்.

நேற்று வெளியான டிரைலர் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அமேஸான் பிரைமில் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்ட புதிய போஸ்டர்: மிரட்டலான தோற்றத்தில் நடிகர் சூர்யா

பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பாண்டிராஜ்  நடிகர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்டர், பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி என முக்கிய நடிகர்கள் பட்டாளமும் இந்தப் படத்தில் நிறைந்துள்ளனர்.

இம்மாதம் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.

அதில், ஜீப் மீது கத்தியுடன் மிடுக்கான தோற்றத்தில் நடிகர் சூர்யா அமர்ந்திருப்பது போன்று உள்ளது. இந்தப் போஸ்டரை ரசிகர்கள் ரீடுவீட் செய்து டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். 

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்?

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் அடுத்த படத்தில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இது அவருக்கு 61-ஆவது படமாகும். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.

இந்தப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிக்க தபுவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகரான மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மோகன்லால்  நடிகர் கமல்ஹாசனுடன் உன்னைப்போல் ஒருவன், விஜய் உடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், ரட்சகன் படத்தில் கதாநாயகனாக நடித்த நாகர்ஜுனாவையும் இந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Surya Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment