Advertisment

ரியா வெளியே… லாவண்யா உள்ளே… புது ஐஷு வந்தாச்சு!

Tamil Serial News ‘மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனி உங்கள் லாவண்யா, ஐஷு வாக தினமும் 8.30 மணிக்கு வருகிறாள்’

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரியா வெளியே… லாவண்யா உள்ளே… புது ஐஷு வந்தாச்சு!

தமிழக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட சீரியல்களான அம்மன் மற்றும் நாயகி 2 ஆகியவற்றில் நடித்தவர், நடிகை லாவண்யா மாணிக்கம். இவரின், புன் சிரிப்புக்கும், பார்வைக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.

Advertisment

நடித்து வந்த சீரியல்கள் முடிந்ததால், சின்னத்திரை வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த லாவண்யா மாணிக்கத்துக்கு அடித்தது லக். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலான ‘இதயத்தை திருடாதே’ தொடரில் நடிக்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதயத்தை திருடாதே தொடரில், ஐஷு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரியா திடீரென வெளியேறிய நிலையில், லாவண்யாவுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு வந்த ஆனந்தத்தில் வாயடைத்துப் போன லாவண்யா, தனது ஆனந்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

‘மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனி உங்கள் லாவண்யா, ஐஷு வாக தினமும் 8.30 மணிக்கு வருகிறாள்’,என பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் இந்த பதிவிற்கு உற்சாகமாக லைக், கமெண்ட் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Tv Serial Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment