Advertisment

கையில் சிகரெட்... காளி வேடம்... லீலா மணிமேகலைக்கு எதிராக ட்விட்டரில் கொந்தளிப்பு!

எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை சமீபத்தில் வெளியிட்ட ’காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ரையை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
காளி போஸ்டர் சர்ச்சை: 'ஐ லவ் யூ' ஹேஷ்டேக் போடச் சொன்ன லீனா மணிமேகலை

எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை சமீபத்தில் வெளியிட்ட ’காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ரையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சிச்சிலி, மொழி எனது எதிரி, லெஸ்பியன் உறவு தொர்பான கவிதை தொகுப்பு உள்ளிட்ட புத்தகங்களை எழுதி உள்ளார் லீலா மணிமேகலை.  மேலும் இவர் இயக்கிய செங்கடல் ஆவணப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, இதன் மூலம் அவருக்கு ஒரு முக்கிய இடத்தை பெற்று தந்தது. இவர் இயக்கிய மாடத்தில் திரைப்படம் ஒடுக்கப்படவர்களில் ஒடுக்கப்பட்டவர்களான குறிப்பிட்ட சமூகத்தின் வலியை அழுத்தமாக பதிவு செய்தது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

 இதில் காளி புகைபிடித்தபடியும் கையில் எல்ஜிபிடிக்யூ கொடியை பிடித்தபடி சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மத செயல்பாட்டாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லீனா மணிமேகலை இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் “ ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.    

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment