Advertisment

எதிர்நீச்சல் மாரிமுத்து-க்கு எதிராக ஜோதிட சங்கம் சட்ட நடவடிக்கை: சீரியலை விஞ்சும் நிஜ மோதல்

ஜோதிடர்கள் குறித்து விவாத நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக புகார் தெரிவித்து எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
A complaint has been lodged at the police station against actor Marimuthu

நடிகர் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடர்கள் குறித்து விவாத நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக புகார் தெரிவித்து எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

எதிர்நீச்சல் தொடரில் நடித்துள்ள நடிகர் மாரிமுத்து, சமீபத்தில் விவாத நிகழ்வில் ஜோதிடர்களுக்கு எதிராக பேசினார். இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும்  பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஒருகிணைப்பாளர் பழ. ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவிற்கு  வக்கீல் நோட்டீஸை  அனுப்பி உள்ளார்.

“ 23/07/2023 அன்று ஜி தமிழ் தொலைகாட்சியில்  பகல் 12 மணிக்கு ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட நடிகர் மாரிமுத்து ஜோதிடம் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.  ஜோதிடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது. ஜோதிட தொழிலை குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பேசியுள்ளார். கருத்து உரிமை என்ற பெயரில் சபை நாகரீகம் மீறி ஜோதிடர்களை ஒருமையில் பேசியுள்ளார்.

மாரி முத்து, ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை  ஆதாரம் இன்றி பேசியதால் மனம் புண்பட்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை நீர்த்துபோகும் அளவிற்கு அவர் பேசியுள்ளார்.

இவரது பேச்சால் பல்லாயிரக்கணக்கான வள்ளுவ குல மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் பேசியது குறித்து தகுந்த விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும். அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடருவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment