Advertisment

லாக் டவுனில் நான் ஸ்டாப் படங்கள்: டிவி-யை ஆக்கிரமித்திருக்கும் ஹீரோ யார் தெரியுமா?

மாஸ் ஹீரோக்களின் புதிய படங்கள், ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை பெறும் எவர்கிரீன் படங்கள் உள்ளிட்டவற்றை தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்புகின்றன.

author-image
shalini chandrasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Lockdown movies in TV, Superstar Rajinikanth, Thalapathy Vijay, Thala Ajith

Lockdown Movies in TV : கொரொனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் இறுதியில் பிரதமர் மோடி, 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதன்படி அந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிவடையவிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு வைரஸை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், இந்த ஊரடங்கு உத்தரவை மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பின்னர் பிரதமர் மோடி அறிவித்தார்.

Advertisment

புற்றுநோயாளியை காக்க ரயிலில் விரைந்து வந்த மருந்து – ரயில்வே நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடை, போன்றவை காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் மக்களை மகிழ்விக்கவும், இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு டிஆர்பி-யில் முன்னணி பெறவும் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போடுகின்றன. குறிப்பாக மாஸ் ஹீரோக்களின் புதிய படங்கள், ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை பெறும் எவர்கிரீன் படங்கள் உள்ளிட்டவற்றை தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்புகின்றன.

ரஜினிகாந்த்

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின், ’தர்பார்’ திரைப்படத்தை தமிழ் புத்தாண்டு அன்று மாலை, சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. முன்னதாக அவர் நடித்த, ’பேட்ட’ திரைப்படமும் ஒளிபரப்பானது. அதன் பிறகு ’எந்திரன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்கிடையே ’எந்திரன்’ திரைப்படம் ஒளிபரப்பான தினத்தில், ஜீ தமிழில் ’2.0’ திரைப்படம் மாலை நேரத்தில் திரையிடப்பட்டது. தவிர முத்து உள்ளிட்ட ரஜினிகாந்தின் பழைய திரைப்படங்கள் அவ்வப்போது சன் நெட்வொர்க் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

விஜய்

நடிகர் விஜய் நடித்த படங்கள் என எடுத்துக் கொண்டால், சன் டிவியில் பெரும்பாலான படங்கள் ஒளிபரப்பாகின. ’கில்லி’ திரைப்படம் திரையிடப்பட்டபோது, இப்போது ரிலீசானது போல் ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தது. ’திருப்பாச்சி’, ’பிரண்ட்ஸ்’, ’பிரியமானவளே’,  ’வேட்டைக்காரன்’, ’தலைவா’, ’சர்க்கார்’, ’புலி’, ’காதலுக்கு மரியாதை’, ’பூவே உனக்காக’, ’கண்ணுக்குள் நிலவு’, ‘நினைத்தேன் வந்தாய்’ போன்ற பல விஜய் படங்கள் சன் டிவி நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகின. இதனைத்தொடர்ந்து ஜீ தமிழில் ’மெர்சல்’ திரைப்படமும், ஜெயா டிவியில் விஜய்யின் ’கத்தி’ மற்றும் ‘சிவகாசி’ திரைப்படமும் திரையிடப்பட்டது. விஜய் டிவி-யில் எப்போதும் போல ‘துப்பாக்கி’யை ஒளிபரப்பினார்கள்.

அஜித்

அஜித் படங்களை பொறுத்தவரை சன் மற்றும் கே டிவியில் ’அமர்க்களம்’, ’காதல் கோட்டை’, ’வாலி’, ’மங்காத்தா’, ’வீரம்’, ’விவேகம்’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின. ஜீ தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ திரையிடப்பட்டது.

இதர படங்கள்

தவிர, சூர்யாவின் ‘சிங்கம்’ சிரீஸ், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘7-ம் அறிவு’, தனுஷுன் ‘வேலையில்லா பட்டதாரி’ சிரீஸ், சிவ கார்த்திகேயனின் ’மான் கராத்தே’, ‘சீமராஜா’, ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’ ஆகிய படங்களும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின.

புதுசு கண்ணா புதுசு… நயன்- விக்கியின் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்களா?

வீட்டில் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் சிலரிடம் க்ராஸ் செக் செய்த போது, தொலைக்காட்சியை விஜய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்றார்கள். இனி வரும் நாட்களில் இந்த நிலை நீடிக்கிறதா, அல்லது மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Actor Vijay Rajinikanth Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment