Advertisment

தரமான ஆக்ஷன் ரெடி.. புதிய படத்தில் இணையும் யஷ், லோகேஷ் கனகராஜ்?

புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ், கேஜிஎஃப் நாயகன் யஷ் இணைகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

author-image
Jayakrishnan R
New Update
Lokesh kanagaraj directed yash in next film

நடிகர் யஷ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

பிரபல தமிழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,, கேஜிஎஃப் நாயகன் யஷ்-ஐ இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

ஒரே படத்தின் மூலம் இந்திய திரையுலகை திருப்பி பார்க்க வைத்த படம் கேஜிஎஃப். இந்தப் படம்தான் கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம்.

பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் யஷ் நாயகனாக மிரட்டியிருப்பார். இந்தப் படத்தின் முதல் பாகம் ரூ.100 கோடி வசூலை தாண்டிய நிலையில், கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஆமிர் கானின் தங்கல் மற்றும் பிரபாஸின் பாகுபாலி2ஆம் பாகத்துடன் ரூ.1000 கோடி வசூல் பட்டியலில் உள்ளது.

இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் லோகேஷ் கனகராஜும், கேஜிஎஃப் யஷ் இணையயுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்தப் படம் தரமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் அண்மையில் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. முன்னதாக லோகேஷின் கைதி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்தப் படம் இந்தியிலும் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment