2019-ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். தனது திறமையினை நன்கு வெளிப்படுத்திய லாஸ்லியா அநேக தமிழ் மக்களின் வரவேற்ப்பை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடனத்தாலும், பாடும் திறமையினாலும் தனது திறமையை வெளிபடுத்திக் கட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னரும் லாஸ்லியா சற்று பிஸியாகவெ இருக்கிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.
விஜய்யின் செல்ஃபிக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் என்ன தெரியுமா?
சில நாட்களுக்கு முன்பு டான்சிங் சூப்பர் ஸ்டார்’ என்ற நடன நிகழ்ச்சியில் லாஸ்லியா ஆடிய நடனத்தை லாஸ்லியா ஆர்மியினர் சமூக ஊடங்களில் வைரலாக்கினர்.
இந்நிலையில் இன்று இந்துஸ்தான் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லாஸ்லியா, அஜித்குமார் நடத்த வேதாளம் படத்தில் வரும் 'ஆலுமா டோலுமா' பாட்டிற்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Aaluma doluma song
LOSLIYA
.
Los today @ hindustan college event ????
.#Losliya #LosliyaArmy #LosliyaFans #biggboss #bb13 #biggbosstamil #biggbosstamil3 pic.twitter.com/2VZjynKkz6
— ???????????????? ???????????????? ????????????????????????????|ℓσѕℓιуα ƒαη♥️ (@sharaofficial19) February 14, 2020
இந்த நடனத்தை அஜித் ரசிகர்களும்,லாஸ்லியா ஆர்மியினரும் மாறி மாறி ரீட்வீட் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தளபதி விஜய்’ நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படமான ’சச்சின்’ படத்தில் இடம்பெற்றிருக்கும், ”வாடி வாடி பாடலுக்கு” நடனமாடி மகிழ்ந்தார் லாஸ்லியா.
. Had a great time dancing with these lovelies yesterday ???????? pic.twitter.com/y8ZW7SGQtq
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) October 9, 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.