பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கலக்கிய லாஸ்லியா மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இளைஞர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றதற்கு அதில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
இலங்கை தமிழரான லாஸ்லியா, இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் அவர் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலகத் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது லாஸ்லியாவுக்கு ஆதரவாக ரசிகர்களால் சமூக ஊடகங்களில் லாஸ்லியா ஆர்மி உருவாக்கப்பட்டது. எப்போதும் சிரித்தபடி இருப்பதுதான் லாஸ்லியாவின் பிளஸ்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, லாஸ்லியா 3 திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பு, லாஸ்லியா மீண்டும் ஒரு முறை டிவியில் வர மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ரொம்ப lucky girl போலயே இவீங்க ???? #StartMusic – வரும் ஞாயிறு இரவு 7:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/NguKR7dQe3
— Vijay Television (@vijaytelevision) September 24, 2020
இந்நிலையில் பிக்பாஸ் 3வது சீசனில் பங்குபெற்ற லாஸ்லியா, அபிராமி, பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், சக்ஷி அகர்வால், ரேஷ்மா உள்ளிட்டோர் விஜய் டிவி நடத்தும் ஸ்டார் மியூசிக் என்ற புதிய நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடியுள்ளனர். அதில், லாஸ்லியா ரூ.1 லட்சம் பரிசு வென்று சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை ‘ரொம்ப lucky girl போலயே இவீங்க’ என்று ட்வீட் செய்து, பகிர அந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. பரிசு வென்ற லாஸ்லியாவுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.