Advertisment

பெரும் எதிர்பார்ப்பில் மாதவனின் மாறா... ஆன்லைனில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சி!

maara In Tamilrockers : ஓடிடி தளத்தில் வெளி வந்து இருக்கும் மாறா படத்தை தமிழ்ராக்கர்ஸ் சட்ட விரோதமாக ஆன்லைனிகல் லீக்

author-image
WebDesk
New Update
பெரும் எதிர்பார்ப்பில் மாதவனின் மாறா... ஆன்லைனில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சி!

maara Full Movie Leaked By TamilRockers : திரைப்படங்களை சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்து வந்த முக்கிய இணையதளங்களில் ஒன்றான தமிழ் ராக்கர்ஸ் .

Advertisment

தமிழ் ராக்கர்ஸ் என்று பெயர் இருந்தாலும், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என அத்தனை மொழிகளிலும் வெளியாகும் புதிய படங்களை, வெளியான ஒரு சில மணி நேரத்தில் கள்ளத்தனமாகப் பதிவேற்றி பரப்பி வந்திருந்த இணையதளம் தமிழ் ராக்கர்ஸ்.கரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு ஆரம்பித்த சமயத்திலிருந்து இந்திய மற்றும் சர்வதேச வெப் சீரிஸ்களையும் இந்த இணையதளத்தை நடத்துபவர்கள் விட்டுவைக்கவில்லை. அனைத்தும் இலவசமாகப் பதிவிறக்கக் கிடைப்பதால் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களில், குறைந்த விலைக்கு வெளியாகும் திரைப்படங்களைக் கூட பலர் தமிழ் ராக்கர்ஸ் மூலம் பார்த்து வந்தனர்.

'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்', 'க.பெ.ரணசிங்கம்', 'வர்மா' என அனைத்து ஓடிடி வெளியீடுகளும், வெளியான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸிலும் கிடைக்க ஆரம்பித்தன. இந்நிலையில் அடுத்த வரவாக, மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளி வந்து இருக்கும் மாறா படத்தை தமிழ்ராக்கர்ஸ் சட்ட விரோதமாக ஆன்லைனிகல் லீக் செய்துள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

படம் குறித்த விமரனங்கள் நல்ல முறையில் உள்ளன. ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட துல்கர் சல்மானின் சார்லி தான் தமிழில் நேரடி ரீமேக்காக மாதவன் நடிப்பில் மாறா என ரிலீஸ் ஆகியுள்ளது. கூடவே ஆன்லைனிலும் லீக்.

TamilRockers Leaked Soorarai Pottru Full Movie To Free Download: மாறா ரிலீஸ்!

முன்பாவது தியேட்டர்களில் இருந்து ‘காபி’ செய்ய வேண்டியிருந்ததால், திருட்டு இணையதளங்களில் படங்களில் குவாலிட்டி சுமாராக இருந்தது. இப்போது ஆன்லைனில் ஓடிடி தளங்களில் இருந்து திருடுவதால், திருட்டு இணையதளங்களும் அதே ஹெச்.டி தரத்தில் புதிய படங்களை கொடுத்து விடுகின்றன.

புதிய படங்களை இப்படி வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை தடுக்க திரையுலகம் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலிக்கவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட இந்த விஷயத்தில் நிர்வாகங்களால் செயல்படுத்த முடியவில்லை.

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் அடிக்கடி தங்கள் முகவரியை மாற்றிக்கொண்டு இது போல புதுப்படங்களை வெளியிடுகின்றன. இந்த புதிய முகவரிகளை சமூக ஊடகங்கள் மூலமாக பலருக்கும் பரவச் செய்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் இதற்காகவே குவியும் வாடிக்கையாளர்கள் மூலமாக அவை பெருமளவில் விளம்பர வருமானங்களை அள்ளுகின்றன.

Madhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment