பிறந்தநாள் டிரீட் கொடுத்த விஜய் சேதுபதி... கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்

Vijay Sethupathi Birthday Today : பிறந்தநாள் பரிசாக அப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tamil Actor Vijay Sethupathi Birthday Today : பல பெரிய நட்சத்திரங்களின் மத்தியில் மிக சாதாரணமாக தோற்றத்தில் எளிமையாக தெரிந்தாலும் சினிமாவுலகில் அத்தனை ஜாம்பவங்களுக்கும் சவால் விடும் வகையில் குறுகிய காலத்திலே மிகப்பெரும் உயரத்திற்கு சென்றுள்ளார் விஜய் சேதுபதி.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலிவுட்டின் படு பிசியான நடிகரான வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மடலை குவித்து வருகிறார்கள். பந்தா இல்லாத விஜய் சேதுபதி ரசிகர்கள் உள்ளடங்கில் குடிகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

Vijay Sethupathi in Sye Raa Narasimha Reddy : ராஜ பாண்டி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி தன் விடா முயற்சியால் முயன்று முயன்று பலமுறைதோற்றுப்போனாலும் மீண்டும் எழுந்து இன்று தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளார் மக்கள் செல்வன்.ஆரம்ப காலத்தில் துணை நடிகராக நடித்த இவர் , தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தனக்குள் ஒளிந்துகொண்டிருந்த திறமையை வெளிக்காட்டினார்.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி, சைரா நரசிம்மரெட்டி படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிரஞ்சீவியின் 151வது படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது சைரா நரசிம்மரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதை ஆகும். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக அப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதியின் பெயர் ராஜபாண்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close