வைரலான மலையாள நடிகையின் அந்தரங்க படங்கள்: முன்னாள் காதலன் கைது!

இதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் போலீசார் பாலக்காட்டைச் சேர்ந்த கிரண்குமாரை கைது செய்தனர்.

நடிகை பாவனாவின் வழக்கில் திலீப் கைதாகியிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மலையாள திரையுலகம் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில், மற்றொரு மலையாள நடிகையின் ஆபாச படங்கள் இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகைச் சேர்ந்தவர் நடிகை மைதிலி. இவரும் கிரண்குமார் (38) என்கிற தயாரிப்பு நிர்வாகி ஒருவருக்கும் கடந்த 2008-ஆம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இருப்பினும், கிரணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது தெரிய வந்ததால், மைதிலி அவருடனான பழக்கத்தை அப்போதே முறித்துக் கொண்டார்.

இதன்பின், மைதிலி பங்குபெறும் படப்பிடிப்புகளுக்கும், மைதிலியின் வீட்டிற்குமே கிரண் நேரடியாக சென்று சில நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். இதற்கு மைதிலி உடன்படாததால் அவரை கிரண் மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

மைதிலியிடம் ரூ.75 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கிரண், பணம் தரவில்லை என்றால், ‘உனது அந்தரங்க படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். அதன்பின், மைதிலி போலீசிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அப்போது கிரண் படங்களை இணையதளங்களில் அப்லோட் செய்யவில்லை.

இதனால் கடும் கோபத்தில் இருந்த கிரண், மைதிலியை பழிவாங்க சரியான தருணம் பார்த்து காத்திருந்தார். சில காலம் கழித்து, மைதிலி சினிமாவில் கொஞ்சம் புகழ் பெற்றவுடன், அவரது அந்தரங்க படங்களை இணையதளத்தில் பதிவேற்ற கிரண் முடிவு செய்திருக்கிறார். அதன் பின், இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை கிரண் பதிவேற்ற, அந்தப் படங்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் போலீசார் பாலக்காட்டைச் சேர்ந்த கிரண்குமாரை கைது செய்தனர். மேலும் சிலர் இந்த சம்பவத்தில்  ஈடுபட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கூடிய விரைவில், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மைதிலி 2011-ல் வெளியான Salt N’ Pepper படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபில்ம்ஃபேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதேபோல், ‘இ அடுத்த கலத்து’ எனும் படத்திற்காகவும் நாமினேட் செய்யப்பட்டார்.

‘மேட்னி’ என்ற படத்திலும், ‘லோஹம்’ எனும் படத்திலும் அவர் பின்னணி பாடகியாகவும் இருந்துள்ளார். இந்தவருடம் (2017) இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். அதில், ‘என்டே சத்யன்வேஷன பரீக்ஷகள்’ மற்றும் ‘கிராஸ்ரோட்ஸ்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close