Advertisment

மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் உருவான க்ளாசிக் பாடல்கள் : உங்களுக்கு பிடித்தது எது?

மணிரத்னம் தனது முதல் படமான பல்லவி அனு பல்லவி தொடங்கி, தளபதி வரை, இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 11 படங்களில் பணியாற்றியுள்ளார். இவர்கள் கூட்டணி தமிழ் சினிமாவின் பொற்காலம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maniratnam Ilayaraja

மணிரத்னம் இளையராா இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இளையராஜா இயக்குனர் ஜாம்பவான் மணிரத்னம் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பது திரைத்துறையில் பலரும் அறியாத ஒரு தகவல் என்று சொல்லலாம். 90-க்கு முன்பு மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இளையராஜா தான் இசை. ஆனால் சில காரணங்களால் இவர்கள் பிரிந்துவிட்டனர்.

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான அஞ்சலி படமே இளையராஜா – மணிரத்னம் இணைந்து பணியாற்றிய கடைசி படமாகும். 1983-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் இணைந்த மணிரத்னம் இளைராஜா கூட்டணியில் 9 படங்கள் வெளியாகியுள்ளது. இந்த 11 படங்களின் பாடல்களும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 1990-ம் ஆண்டு அஞ்சலி படத்துடன் இளைராஜாவுடனான தனது திரை பயணத்தை முடித்துக்கொண்ட மணிரத்னம், 1992-ம் ஆண்டு தான் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தார். ரோஜா படம் தொடங்கி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார்.

இதனிடையே இளையராஜா மணிரத்னம் இருவரும் ஜூன் 2 (இன்று) தங்களது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு திரைத்துறையில் முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மணிரத்னம் முன்னணியில் இருந்தாலும் காலத்தால் அழியாத இசையை கொடுப்பதில் இளையராஜா எப்போதுமே ஜாம்பவான் தான். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாத ஒரு தகவலாக உள்ளது.

மணிரத்னம் – இளையராஜா இருவரும் இணைந்து பணியாற்றியவில்லை என்றாலும் கூட அவர்கள் பணியாற்றிய காலத்தில் கொடுத்த படங்கள் இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த படங்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படம் நாயகன். ஹாலிவுட்டின் காட்பாதர் படத்திற்கு இணையாக இன்றுவரை பேசப்பட்டு வரும் தமிழ் சினிமா நாயகன் தான். இந்த படம் வெளியான 25 ஆண்டுகளுக்குப் பிறகு, டைம் இதழின் எல்லா காலத்திலும் சிறந்த 100 படங்களின் பட்டியலில் நாயகன் படம் இடம் பிடித்துள்ளது. மேலும் அந்த அனுபவத்தை தனது மறக்க முடியாத ட்யூன்களால் உருவாக்கியதில் இளையராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த படத்தின் தென்பாண்டி சீமையிலே பாடல் யாராலும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. அதேபோல் வேலு நாயக்கருக்கு மகனின் மரணம் பற்றிச் சொல்லும் காட்சியில் மணிரத்னத்தின் திரைக்கதையையும், கமல்ஹாசனின் நடிப்பையும் தனது சிறப்பாக பின்னணி இசையால் ரசிகர்களின் மனதிற்குள் ஆழமாக பதியவைத்த பெருமைக்கு சொந்தக்காரார் இளையராஜா.

தளபதி

கே பாலச்சந்தருக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வந்த கடைசி இயக்குனர் மணிரத்னம் தான் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், அவருக்கு ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் மணிரத்னம். இந்த படத்தில் இளையராஜாவின் இசை இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக இசையமைத்திருப்பார். காதலாக இருந்தாலும், உணர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தாலும், இளையராஜாவின் ட்யூன்கள் இல்லாமல், தளபதி படம் சிறப்பாக வந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லாம்.

அஞ்சலி

1990 களில் வளர்ந்த குழந்தைகள் இந்த கோடைகால பிளாக்பஸ்டர் திரைப்படமான அஞ்சலி மறக்க முடியாத ஒரு படமாகும். இளையராஜாவின் 500-வது திரைப்படமான அஞ்சலி 1991 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இசையமைப்பிலும் அஞ்சலி ஒரு சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. அஞ்சலி அஞ்சலி என்ற தலைப்பு பாடல் அப்போது குழந்தைகளின் கீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்னி நட்சத்திரம்

ஒரு அப்பா வெவ்வேறு அம்மாக்களுக்கு பிறந்த சகோதரர்களுக்கு இடையேயான மோதலைப் பற்றிய படம் அக்னி நட்சத்திரம். இந்த படத்தில் இடம்பெற்ற பிளாக்பஸ்டர் பாடலான ராஜா ராஜாதி ராஜா பாடல் இளைஞர்களிள் டோனாக அமைந்த நிலையில், ஒரு பூங்கா வானம் மற்றும் தூங்காத விழிகள் ஆகிய காதல் பாடல்கள் தற்போதைய இளைஞர்களின் பிளேலிஸ்ட்டில் உள்ளது.

மௌன ராகம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு சக்திவாய்ந்த மற்றும் தனது படங்களில் வலிமையான பெண் கேரக்டர்களுக்கு பெயர் பெற்றவர் மணிரத்னம். அந்த வகையில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான மௌனராகம் என்ற காதல் படம் இதற்கு பெரிய உதாரணமாக கூறலாம். முன்னணி பெண் கேரக்டரில் நடித்த நடிகை ரேவதி புதிதாக திருமணமான கணவருடனான தனது கடந்தகால உறவைப் பற்றி அனைத்து ரகசியங்களையும் சொல்லிவிடுகிறார். விவேகமான காதலை சித்தரிப்பதிலும், உறவில் இருக்கும் பெண்ணுக்கு சமமான முக்கியத்துவத்தைக்

கொடுப்பதிலும் மணிரத்னம், தனது சமகாலத்தவர்களை விட தான் ஒரு முன்னோடியாக இருப்பதை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நிலாவே வா பாடலில் இளையராஜா படத்தின் மொத்த உணர்ச்சிகளையும் தனது பின்னணி இசை மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த பட்டியலில் உங்களுக்குப் பிடித்தது எது?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment