Advertisment

மணிரத்னம் இயக்கப்போவது ‘அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகமா?

மணிரத்னம் இயக்கும் மல்ட்டி ஸ்டார் படம், ‘அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
மணிரத்னம் இயக்கப்போவது ‘அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகமா?

மணிரத்னம் இயக்கும்  மல்ட்டி ஸ்டார் படம், ‘அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு, பல நட்சத்திரங்களை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் மணிரத்னம். அரவிந்த் சாமி, சிம்பு, ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை, மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில், 6 பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். அதில், 3 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவிட்டார்.

இந்தப் படம், ‘அக்னி நட்சத்திரம்’ டைப்பிலான கதை எனத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை, ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம். மணிரத்னம் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘அக்னி நட்சத்திரம்’. பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.

Tamil Cinema Maniratnam Vijay Sethupathi Madras Talkies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment